வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkதிமுக எம்எல்ஏ கு.க.செல்வம் பாஜகவில் இணைந்தாரா?

திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் பாஜகவில் இணைந்தாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் அவர்கள் பாஜகவில் இணைந்ததாகச் செய்தி ஒன்று வைரலாகி வருகிறது.

வைரலான் செய்திக் குறித்த டிவீட்.

Fact Check/Verification

சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் எம்எல்ஏவாக இருப்பவர் திரு.கு.க.செல்வம். இவர் ஏற்கனவே அதிமுகவில் இருந்தார். 1997 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்து, தற்சமயம் ஆயிரம் விளக்குத் தொகுதியில் எம்எல்ஏவாக உள்ளார்.

திமுகவின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்தவர் ஜெ.அன்பழன். இவர் கொரானாத் தொற்றால் சமீபத்தில் காலமானார்.

அவர் இருந்த மாவட்டச் செயலாளர் பதவி காலியாக இருப்பதால், அப்பதவியைப் பெற திமுகவின் சீனியர்களுக்கிடையே கடும் போட்டி நிலவியது.

அப்பதவியை பெற முயன்றவர்களில் எம்எல்ஏ கு.க.செல்வமும் ஒருவர். இவர் தற்சமயம் திமுகவின் தலைமை நிலைய செயலாளர் பொறுப்பையும் வகித்து வருகிறார்.

சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு பல சீனியர்கள் போட்டியிடும் நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக, உதயநிதிக்கு நெருக்கமான இளைஞரணியைச் சார்ந்த சிற்றரசுவுக்கு இப்பதவித் தரப்பட்டுள்ளது.

இது கட்சியினரிடையே மாபெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கு.க.செல்வம் அவர்கள் திமுகவிலிருந்து விலகி, பாஜகவில் இணைய இருப்பதாக செய்தி ஒன்று பரவியுள்ளது.

நக்கீரன், தந்தி.டிவி, ஒன் இந்தியா உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள், இத்தகவலை செய்தியாக வெளியிட்டிருந்தன.

கு.க.செல்வம் குறித்து நக்கீரனில் வெளிவந்தச் செய்தி.
நக்கீரனில் வெளிவந்தச் செய்தி.
கு.க.செல்வம் குறித்து தந்தி டிவியில் வெளிவந்தச் செய்தி.
தந்தி டிவியில் வெளிவந்தச் செய்தி.
கு.க.செல்வம் குறித்து ஒன் இந்தியாவில் வெளிவந்தச் செய்தி.
ஒன் இந்தியாவில் வெளிவந்தச் செய்தி.

ஆகவே, இச்செய்தியின் உண்மைத் தன்மைக் குறித்து நியூஸ்செக்கர் சார்பில் ஆராய்ந்தோம்.

உண்மை என்ன?

இச்செய்திக் குறித்து நாம் ஆராய்ந்தபோது, இதுக்குறித்த உண்மையான செய்தியை நம்மால் அறிய முடிந்தது.

தான் பாஜகவில் இணைந்ததாகப் பரவியச் செய்தியை கு.க.செல்வம் முற்றிலும் மறுத்துள்ளார். டெல்லியில் பாஜகத் தலைவர் நட்டாவைச் சந்தித்தப் பின் அவர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

“எனது தொகுதியின் கீழ்வரும் நுக்கம்பாக்கத்தில் இருக்கும் ரயில் நிலையத்தில் இரண்டாவது லிஃப்ட்டை கட்டித் தர வேண்டும் என்று பியூஷ் கோயல் அவர்களைச் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளேன்.

 பாஜக தேசியத் தலைவர் நட்டாவைச் சந்தித்து ராமர் கோவில் கட்டியதற்காக வாழ்த்து கூறியதுடன், இராமேஸ்வரத்திலும் இதுப்போன்ற கோயில்களைக் கட்ட வேண்டும் என்றுக் கோரிக்கை வைத்துள்ளேன்.

மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் மூன்று கோரிக்கைகளை வைக்கிறேன்.  தேசத்தில் நல்லதொரு ஆட்சியைத் தரும் மோடிக்கு எதிராக வீண் குற்றச்சாட்டுகளை வைக்கும் காங்கிரஸ் கட்சியுடனான தொடர்பைத் துண்டிக்க வேண்டும், தமிழ் கடவுள் முருகனைத் தவறாகப் பேசியவர்களுக்கு எதிராக கண்டனம் தெரிவிக்க வேண்டும். உட்கட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்”

கு.க. செல்வம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியது.
கு.க. செல்வம் பத்திரிக்கையாளர் சந்திப்பு. நன்றி: புதிய தலைமுறை

Conclusion

நம் விரிவான விசாரணைக்குப்பின், கு.க செல்வம் அவர்கள் பாஜகவில் சேர்ந்ததாக வெளிவந்தச் செய்திகள் பொய்யானது என்று நமக்குத் தெளிவாகிறது.

Result: False/Fabricated


Our Sources

Twitter Profile: https://twitter.com/koushiktweets/status/1290560743826264064

Thanthi TV: https://www.thanthitv.com/News/TamilNadu/2020/08/04143531/1584599/DMK-BJP.vpf

One India: https://tamil.oneindia.com/news/chennai/speculation-that-dmk-mla-ku-ka-selvam-may-join-with-bjp-393335.html

Nakkeeran: https://www.nakkheeran.in/special-articles/special-article/chennai-dmk-mla-ku-ka-selvam-join-bjp

Pudhiya thalaimurai: https://www.youtube.com/watch?v=i4SeN_hAPB8


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular