திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact Checkஜாக்கி சான் சண்டைக் காட்சிகளில் சந்தித்த விபத்துகளை அவரது மகளுக்கு காட்டினாரா?

ஜாக்கி சான் சண்டைக் காட்சிகளில் சந்தித்த விபத்துகளை அவரது மகளுக்கு காட்டினாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: ஜாக்கி சான் சண்டைக் காட்சிகளில் சந்தித்த விபத்துகளை அவரது மகளுக்கு காட்டினார்.

Fact: வைரலாகும் வீடியோவிலிருப்பவர் ஜாக்கி சானின் மகள் அல்ல. இக்காட்சி ரைட் ஆன் (Ride On) எனும் திரைப்படத்தில் வரும் காட்சியாகும். இக்காட்சியில் ஜாக்கி சானுடன் இருப்பவர் லியு ஹாவ்க்கன் எனும் சீன நடிகையாவார்.

“ஜாக்கி சான் தனது மகளுக்கு யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டேன் என்ற காட்சியை காண்பித்த நெகிழ்வான தருணம்.!” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இவ்வீடியோவில் ஜாக்கி சானும் ஒரு பெண்ணும் படப்பிடிப்பில் ஜாக்கிசானுக்கு ஏற்பட்ட விபத்துகளை தொலைக்காட்சியில் பார்ப்பதாய் உள்ளது.

ஜாக்கி சான் சண்டைக் காட்சிகளில் சந்தித்த விபத்துகளை அவரது மகளுக்கு காட்டியதாக கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வீடியோத் தகவல்
Screenshot from Twitter@MoideenKadhar

Twitter Link | Archived Link

ஜாக்கி சான் சண்டைக் காட்சிகளில் சந்தித்த விபத்துகளை அவரது மகளுக்கு காட்டியதாக கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வீடியோத் தகவல்
Screenshot from Facebook/sankar.perumal.562

Facebook Link

ஜாக்கி சான் சண்டைக் காட்சிகளில் சந்தித்த விபத்துகளை அவரது மகளுக்கு காட்டியதாக கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வீடியோத் தகவல்
Screenshot from Facebook/manickam.sabarish.9

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடித்ததும் தக்காளி விலை குறையும் என்றாரா நிர்மலா சீதாராமன்?

Fact Check/Verification

ஜாக்கி சான் சண்டைக் காட்சிகளில் சந்தித்த விபத்துகளை அவரது மகளுக்கு காட்டியதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

முன்னதாக ஜாக்கி சானுக்கு எத்தனை பிள்ளைகள் என்று தேடினோம். இதில் அவருக்கு ஜெய்ஸி சான் என்ற மகனும், எட்டா நக் எனும் மகளும் இருப்பதாக தெரிய வந்தது.

எட்டா நக்கின் முகம் வைரலாகும் வீடியோவில் காணப்படும் பெண்ணின் முகத்திலிருந்து வேறுபட்டிருப்பதை நம்மால் காண முடிந்தது.

ஜாக்கி சான் சண்டைக் காட்சிகளில் சந்தித்த விபத்துகளை அவரது மகளுக்கு காட்டியதாக கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வீடியோத் தகவல்

இதனைத் தொடர்ந்து வைரலாகும்  வீடியோவிலிருக்கும் பெண் குறித்து தேடினோம். இத்தேடலில் அப்பெண் ஒர் சீன நடிகை என்றும், அவர் பெயர் லியு ஹாவ்க்கன் (Liu Haocun) என்றும் அறிய முடிந்தது.

அண்மையில் ஜாக்கி சானும் லியு ஹாவ்க்கனும் ஒன்றாக இணைந்து ரைட் ஆன் (Ride On) எனும் திரைப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் வந்த காட்சி ஒன்றே சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஐ மீன் எனும் யூடியூப் பக்கத்தில் இந்த வீடியோவானது பதிவு செய்யப்பட்டிருப்பதை நம்மால் காண முடிந்தது.

ஜாக்கி சான் சண்டைக் காட்சிகளில் சந்தித்த விபத்துகளை அவரது மகளுக்கு காட்டியதாக கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வீடியோத் தகவல்
Screengrab from Youtube/I mean

தொடர்ந்து தேடுகையில் இப்படம் குறித்து ஜாக்கி சானும் லியு ஹாக்கினும் பேசிய வீடியோவை ‘Jackie Chan Germany’ எனும் யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.

கிடைத்த ஆதாரங்களின் படி பார்க்கையில் நமக்கு தெளிவாகுவது என்னவென்றால்,

  1. வைரலாகும் வீடியோவிலிருப்பவர் ஜாக்கி சானின் மகள் அல்ல. அவர் ஒரு சீன நடிகையாவார்.
  2. வைரலாகும் வீடியோவில் காணப்படும் காட்சி ஒரு திரைப்பட காட்சியாகும். அது உண்மை சம்பவமல்ல.

Also Read: லண்டனில் ஆர்.கே.சுரேஷை சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய அண்ணாமலை என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!

Conclusion

ஜாக்கி சான் சண்டைக் காட்சிகளில் சந்தித்த விபத்துகளை அவரது மகளுக்கு காட்டியதாக கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வீடியோத் தகவல் முற்றிலும் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Youtube Video from I mean
Youtube Video from Jackie Chan Germany

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular