வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkஇந்தி தெரியாது என்றால் பாகிஸ்தானுக்கு போய் விடுங்கள் என்று பாஜக மாநில இளைஞரணி தலைவர் கூறினாரா?

இந்தி தெரியாது என்றால் பாகிஸ்தானுக்கு போய் விடுங்கள் என்று பாஜக மாநில இளைஞரணி தலைவர் கூறினாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

இந்தி தெரியாது என்றால் பாகிஸ்தானுக்கு போய் விடுங்கள் என்று பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ்.ப.செல்வம்  அவர்கள் கூறியதாக இருக்கும் நியூஸ்கார்ட் ஒன்றை பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் பதிவிட்டுள்ளார்.

இந்தி தெரியாது என்றால் பாகிஸ்தானுக்கு போய் விடுங்கள் கூறியதாக வைரலான பதிவு
வைரலானப் பதிவு.

Fact Check/Verification

இன்று இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் தேசியக் கல்விக் கொள்கை. இந்தப் புதியக் கொள்கைக்கு தமிழகம் முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

அதிலும் இக்கொள்கையின் ஒரு அங்கமாக விளங்கும்  மும்மொழிக் கொள்கை, இந்தியைப் புகுத்துவதற்கு வழிகோலும் என்பதால் இக்கொள்கை பலத்த எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது.

கனிமொழி அவர்களை CISF அதிகாரி இந்தி தெரியுமா என்று கேட்ட சம்பவம், ஆயூஷ் அமைச்சக பயிற்சியில் இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என ஆயுஷ் அமைச்சக செயலாளர் கூறிய சம்பவம் போன்றவை எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியதுபோல் இந்திக்கு எதிரான தமிழர்களின் நிலைப்பாட்டை மேலும் வலுக்க வழி செய்துள்ளது.

இதன்பின் இந்திக்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டை தமிழர்கள் பல வகைகளில் வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை #இந்தி_தெரியாது_போடா எனும் ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் பரப்பரத்தது.

இந்த ஹேஷ்டேகானது உலகம் முழுவதும் டிரெண்டிங்கில் வந்து அனைத்து செய்தி ஊடகங்களிலும் செய்தி பொருளானது.

இந்தி சர்ச்சைக் குறித்த செய்தி
இந்தியா டுடே செய்தி.

சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் இந்த கருத்துக்கு எதிராக பலரும்  தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, “இந்தி தெரியாது என்றால் பாகிஸ்தானுக்கு போய் விடுங்கள்” என்று பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ்.ப.செல்வம்  அவர்கள் கூறியதாக இருக்கும் நாரதர் மீடியா நியூஸ்கார்ட் ஒன்று  சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டது.

இந்த நியூஸ்கார்டை பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வினோஜ்.ப.செல்வம்  அவர்களுக்கு எதிரான தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

சவுக்கு சங்கர் அவர்களின் டிவிட்டர் பதிவு.

இச்செய்தியின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய நியூஸ் செக்கர் தமிழ் சார்பில் இச்செய்தியை ஆராய்ந்தோம்.

உண்மை என்ன?

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் நியூஸ்கார்டின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய அந்த நியூஸ்கார்டை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆராய்ந்தோம்.  அதன்பின் பகிரப்படும் நியூஸ்கார்டானது முற்றிலும் பொய்யானது என்ற உண்மை நமக்குத் தெளிவாகியது.

உண்மையில் வினோஜ்.ப.செல்வம் அவர்கள்  “இந்தி படித்தால் தமிழ் அழியாது, திமுக தான் அழியும்!” என்றுதான் கூறியுள்ளார். அதுதான் நாரதர் மீடியாவில் நியூஸ்கார்டாக வெளிவந்துள்ளது. ஆனால் அந்த நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டு தவறாகப் பரப்பப்பட்டுள்ளது.

நாரதர் மீடியா டிவிட்டர் பதிவு.

வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

வினோஜ்.ப.செல்வம் அவர்களும் இச்செய்தி பொய்யானது என்று தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

வினோஜ்.ப.செல்வம் அவர்களின் டிவிட்டர் பதிவு.

 இதன்மூலம் பரப்பப்படும் நியூஸ்கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் செய்தி முற்றிலும் பொய்யானது என்று நமக்கு தெளிவாகிறது.

Conclusion

நம் விரிவான ஆய்வுக்குப்பின்,  “இந்தி தெரியாது என்றால் பாகிஸ்தானுக்கு போய் விடுங்கள்” என்று வினோஜ்.ப.செல்வம்  அவர்கள் கூறியதாக சவுக்கு சங்கர் பகிர்ந்த  நியூஸ்கார்டானது முற்றிலும் பொய் என்று நமக்கு தெளிவாகிறது.

Result: False


Our Sources

India Today: https://www.indiatoday.in/india/story/t-shirts-against-hindi-imposition-take-tamil-nadu-by-storm-1719526-2020-09-07

Savukku Sankar Twitter Profile: https://twitter.com/savukku/status/1303267621794533376

Narathar Media Twitter Profile: https://twitter.com/NaratharM/status/1301911518091436032

Vinoj P Selvam Twitter Profile: https://twitter.com/VinojBJP/status/1303293994483421184?s=08


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular