சனிக்கிழமை, ஜூன் 22, 2024
சனிக்கிழமை, ஜூன் 22, 2024

HomeFact Checkவடகொரிய அதிபர் உணவுப் பற்றாக்குறையை சரிசெய்வதற்கு நாய்களை ஒப்படைக்க வற்புறுத்தினாரா?

வடகொரிய அதிபர் உணவுப் பற்றாக்குறையை சரிசெய்வதற்கு நாய்களை ஒப்படைக்க வற்புறுத்தினாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

வடகொரிய அதிபர் கிம், நாட்டில் நிலவும் உணவுப் பற்றாக்குறையைச் சரிசெய்ய வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளான நாய்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டதாக  செய்தி ஒன்று ஊடகங்களில் வெளிவந்துள்ளது.

வைரலானச் செய்தி.

Fact Check/Verification

உலகின் இரும்புத்திரையாக விளங்குகிறது வடகொரியா. உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவையே எதிர்த்து நின்று சவால் விடும் தைரியம் கொண்ட நாடாக விளங்குகிறது. இந்நாட்டில் அணு ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதால் இந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொரானாக் காலத்தில் உலக நாடுகள் அனைத்தும்  மாபெரும் பொருளாதாரப் பிரச்சனையை எதிர்க்கொண்டுள்ளது.

இந்நிலையில் வடகொரியாவில் உணவுப்பிரச்சனைக் காரணமாக வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளான நாய்களை இறைச்சிக்காக ஒப்படைக்க வேண்டும் என்று வடகொரிய அதிபர் கிம்  உத்தரவிட்டதாக ஊடகங்களில்  செய்தி வெளிவந்தது.

நியூஸ்18 தமிழில் இதுக்குறித்தச் செய்தி வெளிவந்துள்ளது.

வடகொரிய அதிபர் உத்தரவுக் குறித்து நியூஸ் 18 தமிழில் வந்தச் செய்தி.
நியூஸ் 18 தமிழில் வந்தச் செய்தி.

மாலைமுரசிலும் இதுக்குறித்து செய்தி வெளிவந்துள்ளது.

வடகொரிய அதிபர் உத்தரவுக் குறித்து மாலை முரசில் வந்தச் செய்தி.
மாலை முரசில் வந்தச் செய்தி.

இச்செய்தியின் உண்மைத் தன்மைக் குறித்து நியூஸ் செக்கர் சார்பில் ஆராய முடிவெடுத்தோம்.

உண்மை என்ன?

ஊடகங்கள் வெளிவரும் இச்செய்தியைக் குறித்து அறிய கூகுளில்  தேடினோம். நம் தேடலில் இச்செய்தியின் உண்மைத் தன்மைக் குறித்து நம்மால் அறிய முடிந்தது.

 நம் தேடலில், வடகொரிய ஊடகமான “Chosun.com” -இல் “N.Korea Clamps down on ‘Decadent’ Pet Dogs” எனும் தலைப்பில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது.

வடகொரிய அதிபர் உத்தரவுக் குறித்து  Chosun.com -இல் வந்தச் செய்தி.
Chosun.com -இல் வந்தச் செய்தி.

“வடகொரிய அதிபர் ஜூலை செல்லப் பிராணி வளர்ப்பு என்பது முதலாளித்துவ கொள்கை என்று காரணம் கூறி, கடந்த ஜூலை செல்லப் பிராணிகள் வளர்ப்புக்கு  நாடு முழுவதும் தடை விதித்தார்.

இதனால் நாடு முழுவதும் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள், அதிகாரிகளால் பலவந்தமாக பறிக்கப்படுகிறது. இவ்வாறு பறிக்கப்படும் நாய்கள் உயிரியல் பூங்காக்களுக்காகவோ அல்லது நாய்க்கறி சமைக்கும் உணவகங்களுக்கோ அனுப்பப்படுகிறது.”

என்று இச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

இச்செய்தியின் மூலம், வடகொரியா அதிபர் உணவுப் பற்றாக்குறையை சரிசெய்வதற்காக நாய்களை ஒப்படைக்க  வற்புறுத்தியதாக வந்தச் செய்தி முற்றிலும் தவறானது என்று தெளிவாகிறது.

Conclusion

வடகொரிய அதிபர் நாய்களை ஒப்படைக்கக் கூறியதற்கு, அது ஒரு முதலாளித்துவப் பழக்கம் என்று அவர் எண்ணியதே காரணமாகும். அதைத் தவிர்த்து, ஊடகங்கள் கூறியதுபோல் உணவுப் பற்றாக்குறை காரணமில்லை என்று நம் ஆய்வில் தெளிவாகியுள்ளது.

Result: Misleading


Our Sources

One India Twitter Profile: https://twitter.com/thatsTamil/status/1295985080465149952

News 18: https://tamil.news18.com/news/international/kim-jong-un-orders-north-koreans-to-hand-over-pet-dogs-for-meat-vjr-334627.html

Malai murasu: https://www.malaimurasu.in/2020/08/19/northkorea-kimjong-dogformeat/?fbclid=IwAR0bemQa4aE1RLY1sfAdLW5IqHvov2zTrRWutr6LRNqV3ggYiCYHJdF3xX8

Chosun. Com: https://english.chosun.com/site/data/html_dir/2020/08/12/2020081200634.html


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular