வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkவேளாண் மசோதாவை எதிர்த்து டிராக்டரை எரித்தது விவசாயிகளா?

வேளாண் மசோதாவை எதிர்த்து டிராக்டரை எரித்தது விவசாயிகளா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

டெல்லியில் புதிய வேளாண் மசோதாவை எதிர்த்து, விவசாயிகள் டிராக்டரை எரித்ததாக செய்தி ஒன்று ஊடகங்களில் வெளிவந்துள்ளது.

வேளாண் மசோதைவை எதிர்த்து நடந்தப் போராட்டம்
பரவியச் செய்தி

 Fact Check/Verification

பாஜக தலைமையிலான மத்திய அரசு சமீபத்தில் மூன்று புதிய வேளாண் மசோதாக்களை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து, அதைச் சட்டமாக நிறைவேற்றியது.

இதை அடுத்து, நாடு முழுவதும் இச்சட்டத்தை எதிர்த்துப் போராட்டங்கள் வெடித்துள்ளது. குறிப்பாக, பஞ்சாப், அரியானாப் போன்ற வட மாநிலங்களில் இப்போராட்டங்கள் கடும் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

இந்த வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று(28/09/2020) டெல்லி இந்திய நுழைவு வாயில் அருகே விவசாயிகள் டிராக்டரை எதிர்த்துப் போராட்டம் நடத்தியதாகச் செய்தி ஒன்று ஊடகங்களில் வெளிவந்துள்ளது.

இச்செய்தியானது நியூஸ்7, குமுதம் உள்ளிட்ட ஊடகங்களிலும் இடம்பெற்றிருந்தது.

நியூஸ் 7-ல் வந்தச் செய்தி
குமுதத்தில் வந்தச் செய்தி

இச்செய்தியைப்  பலரும் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை என்ன?

விவசாயிகளுக்கு டிராக்டர் என்பது கடவுளுக்கு சமமான ஒன்றாகும். எத்தகைய காரணமாக இருந்தாலும் விவசாயிகள் இவ்வாறு செய்யத் துணிய  மாட்டார்கள்.

ஆனாலும் ஊடகங்களில் விவசாயிகள் டிராக்டரை எரித்ததாகவே செய்தி வெளிவந்துள்ளது. ஆகவே இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இத்தகவலை நியூஸ்செக்கர் சார்பில் ஆராய முடிவெடுத்தோம்.

பரவி வரும் இச்செய்தியின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய, இச்செய்திக் குறித்து கூகுளில் தேடினோம்.

இவ்வாறு தேடியபோது இச்சம்பவத்தின் பின்னணியில் இருந்த உண்மையை நம்மால் அறிய முடிந்தது.

உண்மையில்  டெல்லியில் இருக்கும் இந்திய நுழைவு வாயில் அருகே டிராக்டரை எரித்தவர்கள் விவசாயிகள் கிடையாது.  காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணியைச் சார்ந்தவர்களே இச்செயலைச் செய்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணியினர் இந்நிகழ்வுக்கு பொறுப்பேற்று அவர்களின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளனர்.

இளைஞர் காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கை.

தினமலர், IBC தமிழ் உள்ளிட்ட இணையத் தளங்களும் இத்தகவலை உறுதி செய்து செய்தி வெளியிட்டிருந்தன.

தினமலரில் வந்தச் செய்தி
IBC தமிழில் வந்தச் செய்தி

Conclusion

நம் விரிவான ஆய்வுக்குப் பின் நியூஸ்7, குமுதம் போன்ற ஊடகங்களில் வெளிவந்ததுபோல் டெல்லியில் டிராக்டரை எரித்தது விவசாயிகள் கிடையாது என்பதும் இந்தியக் காங்கிரஸின் இளைஞர்கள் அணியைச் சார்ந்தவர்களே இதை செய்துள்ளனர் என்பதும் தெளிவாகியுள்ளது.

Result: False Headline


Our Sources

News7’s Twitter Profile: https://twitter.com/news7tamil/status/1310441101027811328

Kumudham’s Twitter Profile: https://twitter.com/kumudamdigi/status/1310442040061079553

Dinamalar’s Twitter Profile: https://twitter.com/dinamalarweb/status/1310721782522015750

IBC Tamil’s Twitter Profile: https://twitter.com/IbcTamilnadu/status/1310792315850682369

IYC’s Twitter Profile: https://twitter.com/IYC/status/1310435379078737920

Twitter Profile: https://twitter.com/sribalantk/status/1310445608675602434

Twitter Profile: https://twitter.com/Sabeeksms/status/1310442644892389376


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular