வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeCoronavirusகொரோனாவை அழிக்குமாஅமைச்சர் செல்லூர் ராஜூ கழுத்தில் தொங்கும் அட்டை?

கொரோனாவை அழிக்குமாஅமைச்சர் செல்லூர் ராஜூ கழுத்தில் தொங்கும் அட்டை?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

தமிழக கூட்டுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கழுத்தில் வைரஸ் தடுப்பு அட்டை அணிந்திருப்பது, கோவிட் 19ஐ உண்டாக்கும் கொரோனா வைரஸை தடுப்பதற்காக என்ற செய்தி ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் கேலியாக வைரலாகி வருகிறது.

கொரோனா
Source: Twitter

Fact check/Verification:

கொரோனா பாதிப்பில் இருந்து அமைச்சர் செல்லூர் ராஜூ சமீபத்தில் மீண்டு வந்திருந்தார். இந்நிலையில் தன்னுடைய பாதுகாப்பு குறித்து அவர் மேலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

அதன் ஒருபடியாக, அமைச்சர் எங்கு சென்றாலும் அவரது கழுத்தில் அடையாள அட்டை போன்ற ஒரு அட்டை இடம்பிடித்துள்ளது. ஜப்பான் நிறுவனம் ஒன்று ‘வைரஸ் ப்ளாக் அவுட்’ என்கிற பெயரில் இந்த அட்டையை விற்பனை செய்து வருகிறது. அமைச்சர் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இதனை கழுத்தில் அணிந்துள்ள செய்தியை. நியூஸ் 18, பாலிமர் நியூஸ் ஆகிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

Source: Polimer News

ஆனால், இணையதளவாசிகள் இச்செய்தியை, அமைச்சர் கொரோனாவை தன்னிடம் அண்ட விடாமல் செய்ய, அதனை அழிக்க இந்த அட்டையை அணிந்துள்ளார் என்று கேலியாக பகிர்ந்து வருகின்றனர்.

Source: Twitter
கொரோனா
Source: Facebook

அமைச்சர் செல்லூர் ராஜூ அணிந்துள்ள வைரஸ் தடுப்பு அட்டை உண்மையிலேயே கொரோனா வைரஸை அழிக்குமா? என்பது குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆராய்ந்தோம்.

உண்மை என்ன?

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைச்சர் செல்லூர் ராஜூ கழுத்தில் அணிந்துள்ள ஜப்பான் தயாரிப்பான ‘வைரஸ் ஷட் அவுட்’ அட்டை இணைய விற்பனைத் தளங்களில் 150 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரையில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

கொரோனா

ஆனால், இந்த அட்டையால் கொரோனா வைரஸ் அழியும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்பது நமக்கு தெரியவந்துள்ளது.

ஒரு மீட்டர் சுற்றளவில் வைரஸ்களை அழிக்கும் அட்டை இது என்று விளம்பரங்களிலும் சொல்லப்படும் நிலையில், அவை உண்மையில்லை என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கட்டுரை ஒன்று. சில நாடுகளில் இந்த அட்டைகளை தடை செய்துள்ளதாகவும் சொல்கிறது இந்த கட்டுரை. கொரோனா வைரஸ் மீடியம் என்னும் மற்றொரு வலைதளமும் இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.

Conclusion:

நியூஸ்செக்கர் தமிழின் இந்த உண்மை அறியும் ஆய்வின் அடிப்படையில் நமக்கு தெரிய வருவது என்னவென்றால், வைரஸ் ஷட் அவுட் அட்டைகள் கொரோனா வைரஸை அழிக்கும் என்பதற்கு எவ்வித நிரூபணமும் இல்லை என்பதாகும்.

Result: Satire/No proof

Our Sources:

Polimer News: https://www.youtube.com/watch?v=EWnaPxfU3j0

Twitter: https://twitter.com/Rajan1570/status/1289743286408581120?s=20

TOI: https://timesofindia.indiatimes.com/city/lucknow/covid-lanyard-may-cause-you-more-harm-than-good/articleshow/77230314.cms

BLOG: https://coronavirus.medium.com/whats-the-deal-with-virus-shut-out-necklaces-6de0780da7f9

Facebook: https://fb.watch/1oOTuQq4BD/

உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular