திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact Checkஇஸ்லாமியராக மாறி நாட்டை விட்டு வெளியேறிய ஜாக்கிசான் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

இஸ்லாமியராக மாறி நாட்டை விட்டு வெளியேறிய ஜாக்கிசான் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: இஸ்லாமிற்கு மாறிய ஜாக்கிசான்

Fact: இத்தகவல் தவறானது. வைரலாகும் புகைப்படம் அவருக்கு மலேசியாவில் கெளரவப்பட்டம் வழங்கியபோது எடுக்கப்பட்டதாகும்.

இஸ்லாமியராக மாறி நாட்டை விட்டு வெளியேறிய நடிகர் ஜாக்கிசான் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”உலக அளவில் ரசிகர்களைக் கொண்ட ஹாலிவுட் நடிகர் ஜாக்கி ஜான், தனது நாட்டைவிட்டு அழுதபடியே வெளியேறி இஸ்லாத்தை தழுவினார்…பிரிட்டிஷ் ஹாங்காங்கில் (சீனா) பிறந்த ஜாக்கிசான், தனது அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் நகைச்சுவைக் காட்சிகள் மூலம் உலக அளவில் ஏராளமான ரசிகர்களைப் பெற்றார்.” என்று இந்த புகைப்படம் பரவி வருகிறது.

இஸ்லாமியராக
Screenshot from X @SYEDMOHAME38091

Archived Link

Screenshot from Facebook/AshrafDMK

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: அயோத்தி ராமர் கோவில் என்று பரவும் தவறான வீடியோ!

Fact Check/Verification

இஸ்லாமியராக மாறி நாட்டை விட்டு வெளியேறிய ஜாக்கிசான் என்று பரவும் புகைப்பட தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது ஜாக்கிசான் இஸ்லாம் மதத்தை தழுவியதாக கடந்த 2020ஆம் ஆண்டிற்கு முன்பிருந்தே பரவி வருவதை நம்மால் அறிய முடிந்தது.

தொடர்ந்து, வைரலாகும் புகைப்படத்தின் பின்னணி பற்றி ஆராய்ந்தபோது கடந்த 2015ஆம் ஆண்டு மலேசியாவின் கெளரவப்பட்டமான Datuk பட்டம் வழங்கப்பட்ட நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது தெளிவாகியது. மலேசியா அரசில் அன்று அங்கம் வகித்த  Tengku Adnan-ன் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் இதுதொடர்பான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

China daily உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களிலும் இச்செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்திகளை இங்கே, இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே படியுங்கள்.

மேலும், ஜாக்கிசானின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கங்களிலோ, அவரது இணையதளப்பக்கத்திலோ அவர் நாட்டை விட்டு வெளியேறியதாகவோ, இஸ்லாம் மதத்திற்கு மாறியதாகவோ எந்த செய்தியும் இடம்பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: அயோத்தி ராமர் கோயில் கட்டுமான குழுவினருடன் உணவருந்தும் பிரதமர் மோடி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Conclusion

இஸ்லாமியராக மாறி நாட்டை விட்டு வெளியேறிய ஜாக்கிசான் என்று பரவும் புகைப்பட தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
X post From, Tengku Adnan, Dated February 01, 2015


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular