Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறியதாக இந்து மக்கள் கட்சி கூறியுள்ளது.
Fact Check/Verification
இந்து மக்கள் கட்சி, தங்களது அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கத்தில், “Being a Christian Vai ko cant comment on another Religion. It is fermenting communal hatred. He can be tried in Court for only this aspect.” என்று ஒரு பதிவைப் பதிவிட்டுள்ளது.
இதை தமிழில் மொழிப்பெயர்த்தால்,
“கிறித்தவரான வைகோ அவர்கள் மற்றொரு மதத்தைக் குறித்து விமர்சிக்கக் கூடாது. இது மதக் கலவரத்துக்கு வழிகோலும். இந்த ஒரு காரணத்துக்காகவே வைகோ மீது சட்டப்படி வழக்குத் தொடுக்கலாம்.”
என்பதே அர்த்தமாக வரும்.
இந்து மக்கள் கட்சியினர் இந்தப் பதிவுடன் கிறித்தவ மதபோதகர் மோகன் சி.லாசரஸ் அவர்கள் பேசும் வீடியோ ஒன்றையும் இணைப்பு செய்துள்ளனர்.
அவ்வீடியோவில் மோகன் சி.லாசரஸ் அவர்கள், வைகோ அவர்களின் மனைவி மற்றும் அவரது பிள்ளைகள் கிறித்தவ மதத்திற்கு மாறிவிட்டனர் எனவும், அவர் ஒரு கட்சித்தலைவர் என்பதால் அதை பொது வெளியில் அறிவிக்க தயங்குகிறார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இதுத்தவிர்த்து, வைகோ அவர்கள் எவ்வாறு ஜெபிக்க வேண்டும் என்பதுக் குறித்து லாசரஸிடம் அறிவுரை வாங்கியதாகவும் அவ்வீடியோவில் தெரிவித்துள்ளார்.
இந்து மக்கள் கட்சியின் இந்தப் பதிவில் குறிப்பிட்டதுபோல், வைகோ அவர்கள் உண்மையில் கிறித்தவ மதத்தை ஏற்றுக்கொண்டாரா? அல்லது இல்லையா? என்பதுக் குறித்து அறிய, இத்தகவலின் பின்னணி குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆராய முடிவெடுத்தோம்.
உண்மையும் பின்னணியும்
மோகன் சி.லாசரஸ் அவர்கள் பேசிய வீடியோவின் அடிப்படையிலேயே இந்து மக்கள் கட்சியானது இவ்வாறு ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளது. ஆகவே அந்த வீடியோ குறித்து முதலில் ஆராய்ந்தோம்.
அவ்வாறு ஆராய்ந்ததில் மோகன் சி.லாசரஸ் பேசிய இவ்வீடியோவானது, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 2017 ஆம் ஆண்டே சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது எனும் உண்மையை நம்மால் அறிய முடிந்தது.
அப்போதே இந்த சர்ச்சைக்கு பதிலளிக்கும் வகையில் வைகோ அவர்கள், தான் கிறித்தவ மதத்துக்கு மாறவில்லை என்று தனது மறுப்பைத் தெரிவித்துள்ளார். இதுக்குறித்தச் செய்தி இந்து மற்றும் விகடனில் வெளிவந்துள்ளது.
மேலும், newzglitz எனும் யூடியூப் சேனலிலும் இதுக்குறித்தச் செய்தி வெளியாகியிருந்ததை நம்மால் காண முடிந்தது.
மேற்குறிப்பிட்டுள்ள ஆதாரங்களின்படி பார்க்கையில், வைகோ அவர்கள் ஒரு கிறித்தவர் என்று இந்து மக்கள் கட்சி கூறியிருப்பது முற்றிலும் தவறானக் கருத்து என்பது தெளிவாகிறது.
Conclusion
வைகோ அவர்கள் ஒரு கிறித்தவர் என்று இந்து மக்கள் கட்சி கூறியிருக்கும் கருத்து முற்றிலும் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Indu Makkal Katchi: https://twitter.com/Indumakalktchi/status/1326519837355515905
Hindu Tamil: https://www.hindutamil.in/news/tamilnadu/108869–1.html
Vikatan: https://www.vikatan.com/government-and-politics/politics/107259-vaiko-denied-report-his-religion
NewsGlitz: https://www.youtube.com/watch?v=m46OSdj44Tg
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.