செவ்வாய்க்கிழமை, ஜூன் 18, 2024
செவ்வாய்க்கிழமை, ஜூன் 18, 2024

HomeFact Checkநடிகர் சூர்யா மும்பையில் வாங்கியுள்ள வீடு என்று பரவும் தவறான புகைப்படம்!

நடிகர் சூர்யா மும்பையில் வாங்கியுள்ள வீடு என்று பரவும் தவறான புகைப்படம்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: மும்பையில் நடிகர் சூர்யா வாங்கியுள்ள வீடு
Fact: வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது Mizu என்கிற உணவகம் ஆகும்.

நடிகர் சூர்யா மும்பையில் வாங்கியுள்ள வீடு என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

”நாலடியான் வீட்டில் ஹிந்தியில் வீட்டின் பெயர். தனது பிள்ளைகள் அனைத்து மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும், ஆனால் தமிழ்நாட்டு பிள்ளைகள் பிற மொழி கற்க கூடாது என்ற குள்ளனின் போலி முகத்திரை கிழிந்தது.” என்பதாக இந்த புகைப்படச்செய்தி பரவி வருகிறது.

Screengrab from Twitter @LawAcademics
Screengrab from Facebook/sonaiah.baskaran
Screengrab from Facebook/VillukuriBJPSanghis

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact Check: ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திடம் பணம் பெற்ற அரசியல் தலைவர்கள் என்று பரவும் செய்தி உண்மையா?

Factcheck / Verification

நடிகர் சூர்யா மும்பையில் வாங்கியுள்ள வீடு என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

குறிப்பிட்ட கட்டிடத்தின் முன்னால் எழுதியுள்ள வார்த்தை மராத்தியில் எழுதியிருப்பது தெரிந்தது. அது மிஜு என்று பொருள்பட எழுதியிருப்பது நமக்கு உறுதியானது.

தொடர்ந்து, இப்புகைப்படம் குறித்து தேடியபோது கடந்த மார்ச் மாதம், நடிகர் சூர்யா பாந்த்ராவில் உள்ள Mizu என்கிற ஜப்பானிய உணவகத்தில் இருந்து வெளியில் வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவில் இருந்து பகிரப்படுகிறது என்பது உறுதியானது.

“South hero Suriya At The Mizu Restaurant In Bandra” என்று இந்த புகைப்படம் இடம்பெற்றுள்ள முழு வீடியோ Movified யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது. அதில், சூர்யா Mizu உணவகத்தில் இருந்து வெளிவரும் காட்சி முழுவதுமாக இடம்பெற்றுள்ளது.

இதேபோன்று, நடிகர் நாகசைதன்யா, சச்சின் டெண்டுல்கர் ஆகியோ உள்ளிட்ட பிரபலங்கள் இந்த உணவகத்தில் இருந்து வெளியே வரும் காட்சிகள் பெரும்பான்மையாக யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோக்கள் மூலமாகவும் சூர்யா வெளியே வருவது Mizu உணவகம் என்பது தெளிவாகிறது.

Also Read: ரஷ்ய பாராளுமன்றத்தில் காமராஜர் படம் இடம்பெற்றிருப்பதாக பரவும் எடிட் செய்யப்பட்ட படம்!

Conclusion

நடிகர் சூர்யா மும்பையில் வாங்கியுள்ள வீடு என்று பரவும் புகைப்படச்செய்தி போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
YouTube Video From, Movified, Dated March 06, 2023 News Article From, PinkVilla, Dated March 05, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular