Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
குடிசை கொளுத்தி வெடியை தடை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தீபாவளி என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது பட்டாசுகள்தான். பட்டாசுகள் போலவே பட்டாசுகளுக்கு வைக்கப்படும் பெயர்களும் பல சமயங்களில் நமது கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில் பட்டாசுக்கு ஒன்றுக்கு குடிசை கொளுத்தி வெடி என பெயரிடப்பட்டதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் வைரலானது.
இதனைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தனது கட்சியை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் குடிசை கொளுத்தி வெடி விற்பனைக்கு வந்துள்ளது; உடனே அரசு இந்த வெடிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியதாக புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
Also Read: அண்ணாமலை பாஜகவினரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக வதந்தி!
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification
குடிசை கொளுத்தி வெடியை தடை செய்ய வேண்டும் என்று ராமதாஸ் அவர்கள் கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்டில் புதிய தலைமுறையில் வழக்கமாக பயன்படுத்தும் வாட்டர்மார்க் காணப்படவில்லை, எழுத்துருவும் வழக்கமானதாக இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக ‘கொளுத்தி’ எனும் வார்த்தை ‘கொழுத்தி என்று எழுத்துப்பிழையுடன் எழுதப்பட்டிருந்ததை காண முடிந்தது.
இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போதே வைரலாகும் நியூஸ்கார்ட்போலியானதுதான் என்பதை நம்மால் உணர முடிந்தது. ஆயினும் சிலர் இந்த நியூஸ்கார்டை உண்மையானது என்று நம்பி பகிர்ந்து வருவதால் இந்த கார்டை முறையாக ஆய்வு செய்து அதன் உண்மைத்தன்மை குறித்து விளக்க முடிவு செய்தோம்.
முன்னதாக உண்மையிலேயே இவ்வாறு ஒரு செய்தியை புதிய தலைமுறை வெளியிட்டதா என்பதை உறுதி செய்ய, அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம். இந்த தேடலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை புதிய தலைமுறை வெளியிட்டதற்கான எந்த ஒரு தரவும் நமக்கு கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் பொறுப்பாளரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டோம்.
அதற்கு அவர்,
“இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை நாங்கள் வெளியிடவில்லை, இது முற்றிலும் பொய்யான நியூஸ்கார்ட்”
என்று விளக்கமளித்தார்.
Also Read: பெட்ரோலை ஆடம்பரப் பொருள் என்றாரா அண்ணாமலை?
Conclusion
குடிசை கொளுத்தி வெடியை தடை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated
Our Sources
Puthiya Thalaimurai Digital Head’s Testimonial
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.