Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
சென்னை வெள்ளம் என்று கூறி புகைப்படம் ஒன்றை பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த டிவீட்டின் ஸ்க்ரீன்ஷாட்டானது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், சென்னையின் பல பகுதிகளில் மழை நீர் நிரம்பி வீட்டுக்குள் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அவர்கள் புகைப்படம் ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து,
“விடியல்_ஆட்சி யில் ஒரே நாள் மழையில் நீச்சல்குளம் ஆன சென்னை “
என்று பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பலரும் இந்த டிவீட்டின் ஸ்கிரீன்ஷாட்டை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification
சென்னை வெள்ளம் என்று எஸ்.ஆர்.சேகர் பகிர்ந்த படம் வைரலானதை தொடர்ந்து, அப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அதில் வைரலாகும் படம் சென்னையில் எடுக்கப்பட்டதல்ல, குஜராத்தில் எடுக்கப்பட்டது என்பதை நம்மால் அறிய முடிந்தது.
கடந்த 2017 ஆம் ஆண்டு குஜராத்தில் பெய்த கனமழை காரணமாக குஜராத்தின் பல பகுதிகளில் நீர் சூழ்ந்தது. அத்தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமே இப்போது சென்னை வெள்ளத்தில் எடுக்கப்பட்டதாக கூறி தற்போது சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது.
Also Read: பீகாரில் பாஜகவினர் பெட்ரோல், கேஸ் விலையுயர்வை ஆதரித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதாக வதந்தி!
Conclusion
சென்னை வெள்ளம் என்று பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் டிவிட்டரில் பகிர்ந்த படம் சென்னையில் எடுக்கப்பட்டதல்ல, அது குஜராத்தில் 2017 ஆம் அண்டு எடுக்கப்பட்ட பழைய படமாகும்.
இதனை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misleading
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.