வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkமுப்படைத் தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காட்சி என்று பரவும் தவறான வீடியோக்கள்!

முப்படைத் தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காட்சி என்று பரவும் தவறான வீடியோக்கள்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

முப்படைத் தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காட்சி என்பதாக பல்வேறு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

முப்படைத் தளபதி
Source: Facebook

தமிழ்நாடு, நீலகிரி மாவட்டம் வெலிங்க்டன் அருகே குன்னூரில் இந்திய ராணுவத்தின் எம்ஐ 17 ரக ஹெலிகாப்டர் டிசம்பர் 8 ஆம் தேதியன்று விழுந்து நொறுங்கியதில் இந்தியாவின் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். உயிர்பிழைத்த விமானப்படை அதிகாரி வருண் சிங் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், “குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து” என்பதாகவும், “விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கடைசி நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது.” என்றும் இரண்டு வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

Facebook Link (Another Video)

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ஐந்தாயிரம் ரூபாயில் 2,500 கழிந்தால் 1500 என்றாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்?

Fact check/ Verification

முப்படைத் தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பதைபதைக்கும் காட்சி என்பதாக பரவும் வீடியோக்கள் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

முதலாவதாக, வானிலேயே விமானம் ஒன்று தீபிடித்து கீழே விழுவது போன்று பரவுகின்ற வீடியோவை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலமாகத் தேடுதலுக்கு உள்ளாக்கியபோது அக்குறிப்பிட்ட வீடியோ காட்சியானது கடந்த 2020 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதமே தி டெலிகிராப் ஊடகம் மூலமாக பதிவிடப்பட்டிருக்கிறது என்பது நமக்குத் தெரிய வந்தது. குறிப்பிட்ட வீடியோவானது, “சிரியா நாட்டின் ஹெலிகாப்டரை புரட்சிப் படையினர் வீழ்த்திய போது எடுக்கப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, குறிப்பிட்ட வீடியோ முப்படைத் தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்து தொடர்பானது அல்ல.

Source: YouTube

பலரும் குறிப்பிட்ட வீடியோவுடன் இதுகுறித்த செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

முப்படைத் தளபதி

தொடர்ந்து, ஹெலிகாப்டர் ஒன்று தரையில் உராய்ந்து மலையடிவாரத்தில் விபத்துக்கு உள்ளாவது போன்ற வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. குறிப்பிட்ட அந்த வீடியோவில் இருக்கும் காட்சி எம்ஐ 17 வகையைச் சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று, கடந்த நவம்பர் மாதம், அருணாச்சலப் பிரதேசத்தில் விபத்திற்கு உள்ளாகியபோது எடுக்கப்பட்டதாகும்.

Source: YouTube
Source: Twitter

ஏஎன்ஐ, ஜீ உள்ளிட்ட செய்தி ஊடகங்கள் குறிப்பிட்ட அச்செய்தியை அப்போது வெளியிட்டுள்ளது.

முப்படைத் தளபதி
NC Media

எனவே, இரண்டு வீடியோக்களுமே தற்போது எடுக்கப்பட்டவை அல்ல என்பது உறுதியாகிறது.

Conclusion:

முப்படைத் தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பதைபதைக்கும் காட்சி என்பதாக பரவும் வீடியோக்களில் சில தவறானவை என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources:

ANI

The Telegraph

Zee News

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular