வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkமறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் சமஸ்கிருத மந்திரங்கள் ஓதப்பட்டதா?

மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் சமஸ்கிருத மந்திரங்கள் ஓதப்பட்டதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் சமஸ்கிருத மந்திரங்கள் ஓதப்பட்டதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் சமஸ்கிருத மந்திரங்கள் ஓதப்பட்டதாக பரவும் தகவல்

இங்கிலாந்து ராணியாக இருந்த இரண்டம் எலிசபெத் கடந்த வியாழனன்று (செப்டம்பர் 8) உயிரிழந்தார். இதை தொடர்ந்து இவரின் இறுதி சடங்கில் சமஸ்கிருத மந்திரங்கள் ஓதப்பட்டது என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் சமஸ்கிருத மந்திரங்கள் ஓதப்பட்டதாக பரவும் தகவல் - 01

Twitter Link | Archive Link

மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் சமஸ்கிருத மந்திரங்கள் ஓதப்பட்டதாக பரவும் தகவல் - 02
Source: Facebook

Facebook Link

மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் சமஸ்கிருத மந்திரங்கள் ஓதப்பட்டதாக பரவும் தகவல் - 03

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: எலிசபெத் ராணியின் முன்னால் அமர்ந்து சாப்பிட்ட ஒரே மாமனிதர் காமராஜர்! வைரலாகும் தகவல் உண்மையானதா?

Fact Check/Verification

மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் சமஸ்கிருத மந்திரங்கள் ஓதப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

இந்த ஆய்வில் வைரலாகும் வீடியோவில் வைல்ட் ஃபிலிம்ஸ் இந்தியா (Wild Films India) என்கிற வாட்டர்மார்க் இடம்பெற்றிருந்ததை காண முடிந்தது. மேலும் மந்திரம் ஓதும் மாணவர்களின் பின்புறம் இருந்த வெள்ளை பலகையில் ‘டெல்லி 2010’ என்ற வாசகமும், 2010 காமன்வெல்த் போட்டிகளின் லோகோவையும் இடம்பெற்றிருந்ததை காண முடிந்தது.

மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி
Screenshot of viral video | Courtesy: Facebook/santanuglobsyn

இந்த ஆதாரங்களை அடிப்படையாக வைத்து தேடியதில், வைல்ட் ஃபிலிம்ஸ் இந்தியாவின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் ‘British students perform Sanskrit shlokas at the Queen’s Baton Relay 2010’ என்று தலைப்பிட்டு வைரலாகும் வீடியோ மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, மே 25, 2019 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை காண முடிந்தது

மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி - 01
Screenshot of YouTube video by Wild Films India

அந்த வீடியோவின் டிஸ்கிரிப்ஷனில் இந்த வீடியோவானது அக்டோபர் 29, 2019 அன்று 2010 டெல்லி காமன்வெல்த் போட்டிகளுக்கான தொடக்க விழாவில் எடுக்கப்பட்டது என  குறிப்பிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. இவ்விழாவானது பக்கிங்காம் அரண்மனையில் நடைப்பெற்றுள்ளது.

மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி - 02
(L-R) Screenshot of viral video and screenshot of YouTube video by Wild Films India

2010 காமன்வெல்த் போட்டியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றிலும் வைரலாகும் வீடியோவின் ஒரு பகுதி இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.

மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி - 03
Screenshot of Facebook post by @cwgdelhi2010

Also Read: கோவை இரட்டை கழிவறை திமுக ஆட்சியில் கட்டப்பட்டதா?

Conclusion

மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் சமஸ்கிருத மந்திரங்கள் ஓதப்பட்டதாக பரவும் தகவல் தவறானது என்பதும், வைரலாகும் வீடியோவில் காணப்படும் நிகழ்வு 13 ஆண்டுகளுக்கு முன்பு 2010 டெல்லி காமன்வெல்த் போட்டிகளின் தொடக்க விழாவில் நடந்த நிகழ்வு என்பதும் நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

(இந்த செய்தியானது ஏற்கனவே நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது)

Result: False

Sources

YouTube Video Wild Film India, Dated May 25, 2019
Facebook post from XIX Commonwealth Games 2010, Dated November 25, 2009


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular