வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact CheckFact Check: ஈரோடு கிழக்கில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக என்று பரவும் தவறான...

Fact Check: ஈரோடு கிழக்கில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக என்று பரவும் தவறான தகவல்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

ஈரோடு கிழக்கில் பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக என்று வீடியோ மற்றும் புகைப்படங்களுடன் கூடிய தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

ஈரோடு கிழக்கில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக என்று பரவும் தவறான தகவல்

“வன்மையாக கண்டிக்கிறேன். திமுக வின் அராஜகம் அதிகரித்து வருகிறது. ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வெட்கக்கேடான செயல் தொடர்கிறது. சட்டம்,ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.” என்று பாஜகவின் நாராயணன் திருப்பதி உட்பட பலரும் இதனை ஷேர் செய்து வருகின்றனர்.

ஈரோடு கிழக்கில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக என்று பரவும் தவறான தகவல்
Screenshot From Twitter @narayanantbjp
ஈரோடு கிழக்கில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக என்று பரவும் தவறான தகவல்
Screenshot From Twitter @gandhiraja
ஈரோடு கிழக்கில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக என்று பரவும் தவறான தகவல்
Screenshot from Twitter @LPRABHAKARAN

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: அதிமுகவுக்கு 63% வெற்றி வாய்ப்பு உள்ளதாக தந்தி தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?

Fact Check / Verification

ஈரோடு கிழக்கில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக என்று சமூக வலைத்தளங்களில் பரவுகின்ற தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

NewsTamil24X7 செய்தி சேனலின் தலைமைச் செய்தியாளர் ராஜேஷ் மற்றும் கேமரா மேன் கருப்பையா ஆகியோர் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒட்டி, வீரப்பன் சத்திரம் அருகே அசோகபுரத்தில் வாக்களர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்றுள்ளனர்.

அப்போது, ஒரு வீட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் உதவியாளர் சபரீசன் தலைமையில் வாக்காளர் அடையாள அட்டையை சரிபார்த்து ஓட்டுக்கு பணம் கொடுத்ததை படம்பிடித்த நிலையில் அவர்களை அங்கிருந்தவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.

ஈரோடு கிழக்கில் பணப்பட்டுவாடா

இந்த முழு செய்தியை தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது NewsTamil24X7.

இச்செய்தியையே, அதிமுகவினர் பலரும் ஈரோடு கிழக்கில் ஊடகவியலாளர்கள் மீது திமுக கொடூர தாக்குதல் என்பதாக ஷேர் செய்து வருகின்றனர்.

Also Read: Fact Check: அண்ணாமலை பொய்யான தகவல் வெளியிட்டார் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறினாரா?

Conclusion

ஈரோடு கிழக்கில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக என்று பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
YouTube Video From, NewsTamil 24X7, Dated February 22, 2023
Facebook Post From, NewsTamil 24X7, Dated February 22, 2023
NewsTamil24X7 Video 1
NewsTamil24X7 Video 2

உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular