சனிக்கிழமை, ஜூலை 27, 2024
சனிக்கிழமை, ஜூலை 27, 2024

HomeFact Checkஇறந்த மனைவி உடலை சுமந்து சென்ற நபர் என்று பரவும் 2016ஆம் ஆண்டு வீடியோ!

இறந்த மனைவி உடலை சுமந்து சென்ற நபர் என்று பரவும் 2016ஆம் ஆண்டு வீடியோ!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: ஒடிசா போல தெரியுது. அரசுகள் எல்லாம் என்ன செய்யுதுனே தெரியல இந்திய நிதியமைச்சரோ எல்லாத்துக்கும் அரசிடம் ஏன் பிச்சை கேக்கறீங்கன்னு திமிரா பேசுது

Fact: வைரலாகும் வீடியோ கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வாகும்.

இறந்த மனைவி உடலை போதிய ஆம்புலன்ஸ் வசதியின்றி சுமந்து சென்ற நபர் என்று வீடியோ ஒன்று வைரலாகிறது.

”ஒடிசா போல தெரியுது. அரசுகள் எல்லாம் என்ன செய்யுதுனே தெரியல இந்திய நிதியமைச்சரோ எல்லாத்துக்கும் அரசிடம் ஏன் பிச்சை கேக்கறீங்கன்னு திமிரா பேசுது ” என்று இந்த வீடியோ பரவுகிறது.

Screenshot from x @Aathiraj8586

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கெஜ்ரிவால் இல்லத்தில் நடந்த சண்டை என்று பரப்பப்படும் வீடியோ உண்மையானதா?

Fact Check/Verification

இறந்த மனைவி உடலை போதிய ஆம்புலன்ஸ் வசதியின்றி சுமந்து சென்ற நபர் என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அந்த வீடியோ கடந்த 2016ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது தெளிவாகியது.

கடந்த 2016ஆம் ஆண்டு ஒடிசாவில் ஒடிசா மாநிலத்தின் பின் தங்கிய மாவட்டமான காளஹந்தியை சேர்ந்த மஜ்ஹி என்ற அந்த மனிதரின் 42 வயது மனைவி அமங் தேய் காசநோய் தாக்கி மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில் மனைவி உடலை சுமந்து செல்ல போதிய வாகன வசதி இல்லாத காரணத்தால் தோளில் சுமந்து சென்றார் என்று இதுகுறித்த செய்தி வெளியாகியுள்ளது.  Hindustan Times உள்ளிட்ட ஊடகங்களில் இச்செய்தி வெளியாகியுள்ளது.

குறிப்பிட்ட நிகழ்வுடன் தொடர்புடைய வீடியோவே தற்போது நடைபெற்ற நிகழ்வு என்பதாகப் பரவுகிறது.

Also Read: இந்து கோயிலை இடித்துக் கட்டப்பட்ட தென்காசி மசூதி என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Conclusion

இறந்த மனைவி உடலை போதிய ஆம்புலன்ஸ் வசதியின்றி சுமந்து சென்ற நபர் என்று பரவும் வீடியோ கடந்த 2016ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
YouTube Video From, Times Now, Dated August 25, 2016

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular