Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
Claim: அயோத்தி இராமர் கோவிலில் மின் இணைப்பு முழுமையாக கொடுக்கப்பட்டு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டதாக பரவும் வீடியோ
Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோ கொல்கத்தாவில் துர்கா பூஜையை முன்னிட்டு அயோத்தி இராமர் கோவில் வடிவில் உருவாக்கப்பட்ட பந்தலில் எடுக்கப்பட்ட வீடியோவாகும்.
அயோத்தி இராமர் கோவிலில் மின் இணைப்பு முழுமையாக கொடுக்கப்பட்டு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஆளுநரும் ஒன்றிய அமைச்சர்களும் தமிழ்நாட்டில் அரசியல் பேசக்கூடாது என்றாரா அண்ணாமலை?
Fact Check/Verification
அயோத்தி இராமர் கோவிலில் மின் இணைப்பு முழுமையாக கொடுக்கப்பட்டு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி வைரலாகும் வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில் itz.broken191 எனும் பயனர் கணக்கை உடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அக்டோபர் 27, 2023 அன்று இதே வீடியோவை பகிர்ந்திருப்பதை காண முடிந்தது. அந்த வீடியோவில் கொல்கத்தா, துர்கா பூஜை போன்ற வார்த்தைகளை ஹேஷ்டேகுகளாக பயன்படுத்தி இருந்ததை காண முடிந்தது.
இதுத்தவிர்த்து அக்டோபர் 29, 2023 அன்று வேறு ஒரு வீடியோவும் இந்த கணக்கில் பதிவிடப்பட்டிருந்தது. அதிலும் கொல்கத்தா, துர்கா பூஜை போன்ற வார்த்தைகளை ஹேஷ்டேகுகளாக பயன்படுத்தப்பட்டிருந்தன. கூடவே துர்கா பந்தல் என்ற வார்த்தையும் ஹேஷ்டாக பயன்படுத்தப்பட்டிருந்தது.
இது நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே இவற்றை கீ வார்த்தைகளாக பயன்படுத்தி இணையத்தில் தேடினோம். அதில் கொல்கத்தாவில் துர்கா பூஜையை முன்னிட்டு அயோத்தி இராமர் கோவில் வடிவத்தை அடிப்படையாக வைத்து பந்தல் ஒன்று அமைக்கப்பட்டதாகவும், அதை ஒன்றிய அமைச்சர் அமித் ஷா அக்டோபர் 16, 2023 அன்று திறந்து வைத்ததாகவும் செய்தி ஒன்று நமக்கு கிடைத்தது.
தொடர்ந்து தேடுகையில் இந்துஸ்தான் டைம்ஸ் இந்த பந்தல் குறித்த புகைப்படங்களுடன் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அச்செய்தியில் வெளியிடப்பட்டிருந்த பந்தலின் புகைப்படத்தையும், வைரலாகும் வீடியோவில் காணப்படும் படத்தையும் ஒப்பிட்டு பார்க்கையில் இரண்டும் ஒன்றே என தெளிவாகியது.
மேலும் இந்த பந்தல் குறித்து வேறு சில யூடியூப் பக்கங்களில் வீடியோ வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. அவற்றின் அடிப்படையில் வைத்து பார்க்கும்போதும் வைரலாகும் வீடியோ கொல்கத்தாவில்தான் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகின்றது. அவ்வீடியோக்களை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
இதனை தொடர்ந்து ராமர் கோவில் குறித்து தேடுகையில், ராமர் கோவில் கட்டுமானத்தை கவனித்து வரும் ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் கடந்த ஞாயிறன்று (24/12/2023) ராமர் கோவிலின் படங்கள் சில பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.
அப்படங்களை காண்கையில் ராமர் கோவிலானது இன்னும் முழுமையாக கட்டி முடிக்காமல், கட்டுமான நிலையில்தான் உள்ளது என அறிய முடிகின்றது மேலும் இராமர் கோவிலும், அதை சுற்றியுள்ள இடங்களும் வைரலாகும் வீடியோவில் காணப்படுவதுபோல் பெரும் கூட்டம் சேர்வதற்கு ஏற்றார்போல் இல்லை எனவும் உணர முடிகின்றது.
Also Read: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நிவாரண நிதி எங்கே என்று கேட்டனரா தூத்துக்குடி மக்கள்?
Conclusion
அயோத்தி இராமர் கோவிலில் மின் இணைப்பு முழுமையாக கொடுக்கப்பட்டு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டதாக வைரலாகும் வீடியோவில் காணப்படுவது அயோத்தி ராமர் கோவில் அல்ல; அது கொல்கத்தாவில் துர்கா பூஜையை முன்னிட்டு அயோத்தி இராமர் கோவில் வடிவில் உருவாக்கப்பட்ட பந்தலாகும்.
இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Report from Hindustan Times, Dated Dated October 18, 2023
Report from The Economic Times, Dated October 16, 2023
Instagram post from the user @itz.broken191, Dated October 27, 2023
Instagram post from the user @itz.broken191, Dated October 29, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.