வியாழக்கிழமை, மே 2, 2024
வியாழக்கிழமை, மே 2, 2024

HomeFact Checkபாஜக நிர்வாகி கட்டெறும்பு பாஜகவிலிருந்து நீக்கமா?

பாஜக நிர்வாகி கட்டெறும்பு பாஜகவிலிருந்து நீக்கமா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: பாஜக நிர்வாகி கட்டெறும்பு என்கிற இசக்கி முத்து பாஜகவிலிருந்து நீக்கப்பட்டார்.

Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று பாஜக மாநிலத் துணைத்தலைவர் கரு.நாகராஜன் தெளிவு செய்துள்ளார்.

திருச்செந்தூர் பாஜகவின் சமூக ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவில் நிர்வாகியாக இருப்பவர் இசக்கி முத்து. இவர் கட்டெறும்பு என்கிற பெயரில் சமூக ஊடகங்களில் கருத்துகளை பதிவு செய்து வருகின்றார். இவர் கடந்த ஜூன் மாதத்தில் டிவிட்டரில் வன்முறையை தூண்டும் வகையில் பதிவு ஒன்றை பதிவிட்டதாக கூறி கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

தற்போது இவர் கட்சியின் பெயரை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டதால் பாஜவிலிருந்து நீக்கப்பட்டதாக கூறி பாஜக மாநிலத் துணைத்தலைவர் கரு.நாகராஜன் பெயரில் அறிக்கை ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பாஜக நிர்வாகி கட்டெறும்பு என்கிற இசக்கி முத்து பாஜகவிலிருந்து நீக்கப்பட்டதாக வைரலாகும் தகவல்

Twitter Link | Archived Link

பாஜக நிர்வாகி கட்டெறும்பு என்கிற இசக்கி முத்து பாஜகவிலிருந்து நீக்கப்பட்டதாக வைரலாகும் தகவல்

Archived Link

பாஜக நிர்வாகி கட்டெறும்பு என்கிற இசக்கி முத்து பாஜகவிலிருந்து நீக்கப்பட்டதாக வைரலாகும் தகவல்

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: அயோத்தி இராமர் கோவிலில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டதாக பரவும் தவறான வீடியோ!

Fact Check/Verification

பாஜக நிர்வாகி கட்டெறும்பு என்கிற இசக்கி முத்து பாஜகவிலிருந்து நீக்கப்பட்டதாக வைரலாகும் அறிக்கை பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜனை ‘மாநில பொது செயலாளர்’ என்று குறிப்பிட்டிருப்பதை காண முடிந்தது. அதை பார்க்கையிலேயே வைரலாகும் அறிவிப்பு போலியானது என உணர முடிந்தது.

பாஜக நிர்வாகி கட்டெறும்பு என்கிற இசக்கி முத்து பாஜகவிலிருந்து நீக்கப்பட்டதாக வைரலாகும் தகவல்

தொடர்ந்து இதுக்குறித்து தேடுகையில் தமிழக பாஜகவின் சமூக ஊடகப்பிரிவின் மாநிலப் பொறுப்பாளர் எம்.எஸ். பாலாஜி என்பவர் வைரலாகும் இந்த அறிக்கை போலியானது என்று மறுப்பு தெரிவித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.  

இதனை தொடர்ந்து கரு.நாகராஜனும் இந்த அறிக்கை போலியானது என்று அவரது எக்ஸ் பக்கத்தில் மறுப்பு தெரிவித்திருந்ததை காண முடிந்தது.

இசக்கி முத்துவும் இத்தகவல் பொய்யானது என்று மறுப்பு தெரிவிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.  

Also Read: திமுக எம்பி செந்தில்குமார் கட்சியை விட்டு விலகியதாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

Conclusion

பாஜக நிர்வாகி கட்டெறும்பு என்கிற இசக்கி முத்து பாஜகவிலிருந்து நீக்கப்பட்டதாக வைரலாகும் தகவல் தவறானதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
X post from Karu.Nagarajan, State Vice President, BJP, Dated December 27, 2023
X post from M.S.Balaji, State Co Convenor – Social Media Cell, BJP, Dated December 27, 2023
X post from Katterumbu Alias Isakki Muthu, BJP, Dated December 27, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular