Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
Claim: பணமதிப்பிழப்பை மலையாள இளைஞன் கிண்டலடித்து பாடியதாக பரவும் வீடியோ!
Fact: வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும். அந்த இளைஞர் உண்மையில் கரகாட்டக்காரன் திரைப்படத்தில் வரும் ‘மாங்குயிலே பூங்குயிலே’ எனும் பாடலையே பாடியிருந்தார்.
“சேட்டன்களுக்கு எப்பவுமே குசும்பு அதிகம். இது அரசியல் பதிவு அல்ல” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அவ்வீடியோவில் இளைஞன் ஒருவன் 2016 ஆம் ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பு நடவடிக்கையை கிண்டலடித்து பாடுவதாக இருந்தது.
இவ்வீடியோவை பலரும் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மோடி மீண்டும் ஆட்சி அமைத்தால் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாகும் என்றாரா நிர்மலா சீதாராமன்?
Fact Check/Verification
பணமதிப்பிழப்பை மலையாள இளைஞன் கிண்டலடித்து பாடியதாக கூறி வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்.
அத்தேடலில் மழவில் மனோரமா தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வைரலாகும் வீடியோ மார்ச் 27, 2018 அன்று ‘Super 4 I Sreehari – Maaghuyile pooghuyile I Mazhavil Manorama’ என்று தலைப்பிட்டு பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதை காண முடிந்தது.
ஆனால் அவ்வீடியோவில் அந்த இளைஞன் பணமதிப்பிழப்பை கிண்டலடித்து பாடும் பாடல் இடம்பெற்றிருக்கவில்லை; கரகாட்டக்காரன் திரைப்படத்தில் வரும் ‘மாங்குயிலே பூங்குயிலே’ எனும் பாடலே இடம்பெற்றிருந்தது.
தொடர்ந்து தேடுகையில் வைரலாகும் வீடியோவில் காணப்படுபவரின் பெயர் ஸ்ரீஹரி ரவீந்திரன் என்பதும், அவர் மழவில் மனோரமா தொலைக்காட்சி நடத்திய சூப்பர் 4 எனும் நிகழ்ச்சியின் வெற்றியாளர் என்பதும் தெரிய வந்தது.
அவர் இந்நிகழ்ச்சியில் பாடிய பாடலின் ஆடியோ எடிட் செய்யப்பட்டு நீக்கி, அதற்கு பதிலாக பணமதிப்பிழப்பை கிண்டலடிக்கும் பாடல் சேர்க்கப்பட்டு போலியாக இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக அறிய முடிகின்றது.
Also Read: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி பெரும் பின்னடைவை சந்திக்கும் என்றாரா பிரசாந்த் கிஷோர்?
Conclusion
பணமதிப்பிழப்பை மலையாள இளைஞன் கிண்டலடித்து பாடியதாக வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Video
Our Sources
Youtube Video from Mazhavil Manorama, Dated March 27, 2018
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.