வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkஇந்தியா கூட்டணியின் டெல்லி பொதுக்கூட்டத்திற்கு வந்த மக்கள் கூட்டமா இது?

இந்தியா கூட்டணியின் டெல்லி பொதுக்கூட்டத்திற்கு வந்த மக்கள் கூட்டமா இது?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: இந்தியா கூட்டணியின் டெல்லி பொதுக்கூட்டத்திற்கு வந்த மக்கள் கூட்டம்.

Fact: வைரலாகும் 2019 ஆண்டின் பழைய படமாகும். அப்படம் கொல்கத்தாவில் வலது சாரி கட்சியினர் நடத்திய பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட படமாகும்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் இந்த வேளையில் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக டெல்லியில் இன்று இந்தியா கூட்டணி சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் “மோடிக்கு எதிராக டெல்லியில் கூடிய மக்கள் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இப்படத்தை திமுக ஐடி விங்கின் மாநில துணை செயலாளர் பாலா உட்பட  பலர் பகிர்ந்து வருகின்றனர்.

இந்தியா கூட்டணியின் டெல்லி பொதுக்கூட்டத்திற்கு வந்த மக்கள் கூட்டம் என்று பரவும் படம்

X Link | Archive Link

இந்தியா கூட்டணியின் டெல்லி பொதுக்கூட்டத்திற்கு வந்த மக்கள் கூட்டம் என்று பரவும் படம்

Archive Link

இந்தியா கூட்டணியின் டெல்லி பொதுக்கூட்டத்திற்கு வந்த மக்கள் கூட்டம் என்று பரவும் படம்

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு நேரில் பாரத் ரத்னா வழங்கிய குடியரசுத்தலைவருக்கு இருக்கை வழங்கப்படவில்லையா?

Fact Check/Verification

இந்தியா கூட்டணியின் டெல்லி பொதுக்கூட்டத்திற்கு வந்த மக்கள் கூட்டம் என்று புகைப்படம் ஒன்று பரவியதை தொடர்ந்தும் அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அப்படம் குறித்து தேடினோம்.

இத்தேடலில் பியூப்பில் டெமாக்ரஸி எனும் இணைய ஊடகத்தில் “WEST BENGAL: Brigade Turns into Red Sea” என்று தலைப்பிட்டு பிப்ரவரி 10, 2019-ல் வெளியிட்ட செய்தியில் வைரலாகும் இதே படம் பயன்படுத்தப்பட்டிருப்பதை காண முடிந்தது. கொல்கத்தாவில் வலது சாரிகள் நடத்திய பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்டதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியா கூட்டணியின் டெல்லி பொதுக்கூட்டத்திற்கு வந்த மக்கள் கூட்டம் என்று பரவும் படம்

தொடர்ந்து தேடியதில்  ‘இந்தியா கண்டெண்ட்’ இணைய ஊடகம் மேற்கூறிய பொதுக்கூட்டம் குறித்து வெளியிட்டிருந்த செய்தியிலும் வைரலாகும் இதே படம் பயன்படுத்தப்பட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது. இப்படம் IANS News தரப்பிலிருந்து பெறப்பட்டதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியா கூட்டணியின் டெல்லி பொதுக்கூட்டத்திற்கு வந்த மக்கள் கூட்டம் என்று பரவும் படம்

மேலும் தேடியதில் அலாமி இணையத்தளத்தில் கொல்கத்தாவில் பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக கூறி இதே படம் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.

இந்தியா கூட்டணியின் டெல்லி பொதுக்கூட்டத்திற்கு வந்த மக்கள் கூட்டம் என்று பரவும் படம்

 Also Read: தமிழிசை முன்னால் ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்டதாக பரவும் பழைய வீடியோ!

Conclusion

இந்தியா கூட்டணியின் டெல்லி பொதுக்கூட்டத்திற்கு வந்த மக்கள் கூட்டம் என்று பரவும் படம் 2019 ஆண்டில் கொல்கத்தாவில் எடுக்கப்பட்ட பழைய படமாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

இச்செய்தியானது நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது.

Result: False

Our Sources
Article By Peoples Democracy, Dated February 10, 2019
IndiaContent Website
Alamy Website

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular