திங்கட்கிழமை, மே 6, 2024
திங்கட்கிழமை, மே 6, 2024

HomeFact Checkதமிழிசை முன்னால் ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்டதாக பரவும் பழைய வீடியோ!

தமிழிசை முன்னால் ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்டதாக பரவும் பழைய வீடியோ!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: அண்மையில் தமிழிசை முன்னால் ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்டார்.

Fact: இச்செய்தி 2018 ஆம் ஆண்டின் பழைய செய்தியாகும்.

தமிழிசை சௌந்திரராஜன் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதியில் இவர் பாஜக சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அண்மையில் ஆட்டோ டிரைவர் ஒருவர் பெட்ரோல் விலையுயர்வு குறித்து கேள்வி கேட்டதால் தமிழிசை முன்னாலேயே பாஜகவினர் அவரை தாக்கியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அண்மையில் தமிழிசை முன்னால் ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்டதாக பரவும் வீடியோ

X Link | Archive Link

அண்மையில் தமிழிசை முன்னால் ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்டதாக பரவும் வீடியோ

Archive Link

அண்மையில் தமிழிசை முன்னால் ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்டதாக பரவும் வீடியோ

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு நேரில் பாரத் ரத்னா வழங்கிய குடியரசுத்தலைவருக்கு இருக்கை வழங்கப்படவில்லையா?

Fact Check/Verification

அண்மையில் தமிழிசை முன்னால் ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, இந்நிகழ்வு குறித்து உரிய கீவேர்டுகளை பயன்படுத்தி இணையத்தில் தேடினோம்.

இத்தேடலில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் செய்தி செப்டம்பர் 17, 2018 அன்று பாலிமர் நியூஸின் யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததை காண முடிந்தது.

அண்மையில் தமிழிசை முன்னால் ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்டதாக பரவும் வீடியோ
Screengrab from Polimer News

தொடர்ந்து தேடுகையில் மேலும் சில ஊடகங்களும் இச்செய்தி குறித்து அதே தேதியில் செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அவற்றை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

இதனையடுத்து தேடுகையில் இச்செய்தி வெளியான மறுநாள் (18/10/2018) தமிழிசை அந்த ஆட்டோ டிரைவர் வீட்டிற்கு சென்று உரையாடிய வீடியோ ஒன்றை அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.

 Also Read: கோவையில் அண்ணாமலை ஓட்டுக்கு பணம் கொடுத்ததாகப் பரவும் 2023ஆம் ஆண்டு வீடியோ!

Conclusion

அண்மையில் தமிழிசை முன்னால் ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்டதாக பரவும் வீடியோ 2018 ஆம் ஆண்டின் பழைய வீடியோவாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
Report from Polimer News, Dated September 17, 2018
Tweet from Tamilisai Soundararajan, Dated September 18, 2018

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular