வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkதூத்துக்குடியில் கனிமொழி விரட்டியடிக்கப்பட்டாரா?

தூத்துக்குடியில் கனிமொழி விரட்டியடிக்கப்பட்டாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: தூத்துக்குடியில் கனிமொழி விரட்டியடிக்கப்பட்டார்.

Fact: இத்தகவல் தவறானதாகும். அவரை பேசச் சொல்லியே மக்கள் கேட்டனர்.

திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தூத்துகுடி மக்களால் விரட்டியடிக்கப்பட்டார் என்று கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

தூத்துக்குடியில் கனிமொழி விரட்டியடிக்கப்பட்டதாக பரப்பப்படும் தகவல்

X Link | Archive Link

தூத்துக்குடியில் கனிமொழி விரட்டியடிக்கப்பட்டதாக பரப்பப்படும் தகவல்

Archive Link

தூத்துக்குடியில் கனிமொழி விரட்டியடிக்கப்பட்டதாக பரப்பப்படும் தகவல்

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு நேரில் பாரத் ரத்னா வழங்கிய குடியரசுத்தலைவருக்கு இருக்கை வழங்கப்படவில்லையா?

Fact Check/Verification

தூத்துக்குடியில் கனிமொழி விரட்டியடிக்கப்பட்டதாக பரப்பப்படும் வீடியோவில் ‘நீங்க பேசுனா போதும்’ என்று கனிமொழியை நோக்கி மக்கள் கூறுவதை கேட்க முடிந்தது.

இது நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே வைரலாகும் வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி வைரலாகும் வீடியோ குறித்து தேடினோம்.

இத்தேடலில் ‘அக்கா நீங்க பேசுனா போதும்க்கா-Kanimozhiயின் வாகனத்தை மறித்து அன்பாக கேட்டுகொண்ட தூத்துக்குடி மக்கள்’ என்று தலைப்பிட்டு சன் நியூஸ் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அவ்வீடியோவில் பொதுமக்கள் கனிமொழியிடம் பேசச் சொல்லி வேண்டுகோள் விடுப்பதையும், அந்த வேண்டுகோளை ஏற்று கனிமொழி பிரச்சார வாகனத்தில் ஏறி பேசுவதையும், அதை மக்கள் கைத்தட்டி ஆரவாரத்துடன் கேட்பதையும் காண முடிந்தது.

தொடர்ந்து தேடியதில் பிஹைண்ட்வுட் ஏர் யூடியூப் சேனலிலும் இதே வீடியோ பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.

இதனையடுத்து தேடியதில் வேறு சில ஊடகங்களும் இந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அவற்றை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கையில் தூத்துக்குடியில் கனிமொழியை பேசச் சொல்லி கேட்டதில் பாதி வீடியோவை மட்டும் வைத்து கனிமொழி விரட்டப்பட்டதாக பொய்யானத் தகவல் பரப்பப்படுகின்றது என்பது தெளிவாகின்றது.

 Also Read: தமிழிசை முன்னால் ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்டதாக பரவும் பழைய வீடியோ!

Conclusion

தூத்துக்குடியில் கனிமொழி விரட்டியடிக்கப்பட்டதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Youtube Video from Sun News, Dated April 01, 2024
Youtube Video from Behindwoods Air, Dated April 01, 2024

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular