வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkஸ்டாலினிடம் ₹200 படிக்காசு பெற்றுக்கொண்டேன் என்றாரா வன்னி அரசு?

ஸ்டாலினிடம் ₹200 படிக்காசு பெற்றுக்கொண்டேன் என்றாரா வன்னி அரசு?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: ஸ்டாலினிடம் ₹200 படிக்காசு பெற்றுக்கொண்டேன் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார் வன்னி அரசு.

Fact: வைரலாகும் டிவீட் வன்னி அரசு பெயரில் இயங்கும் போலிக் கணக்கில் பதிவிடப்பட்டதாகும்.

“இன்று எனக்கு தாலாட்டு நாள்..! தமிழ்நாடு முதல்வர் @mkstalin அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றதுடன்..காலை உணவும், படிக்காசு ₹200 ம் பெற்றுக்கொண்டேன்” என்று விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு டிவீட் செய்ததாக ஸ்க்ரீன்ஷாட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

ஸ்டாலினிடம் ₹200 படிக்காசு பெற்றுக்கொண்டேன் என்று எக்ஸ் தளத்தில் வன்னி அரசு பதிவு

X Link | Archive Link

ஸ்டாலினிடம் ₹200 படிக்காசு பெற்றுக்கொண்டேன் என்று எக்ஸ் தளத்தில் வன்னி அரசு பதிவு

Facebook Link

ஸ்டாலினிடம் ₹200 படிக்காசு பெற்றுக்கொண்டேன் என்று எக்ஸ் தளத்தில் வன்னி அரசு பதிவு

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: இந்தியா கூட்டணி 304 இடங்களை பெறும் என்று கருத்துக்கணிப்பு வெளியிட்டதா இந்தியா டுடே?

Fact Check/Verification

ஸ்டாலினிடம் ₹200 படிக்காசு பெற்றுக்கொண்டேன் என்று எக்ஸ் தளத்தில் வன்னி அரசு பதிவிட்டதாக வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட்டின் உண்மைத்தன்மை குறித்து அறிய டிவிட்டர் அட்வான்ஸ்ட் சர்ச் (Twitter Advanced Search) முறையை பயன்படுத்தி வைரலாகும் டிவீட் குறித்து தேடினோம்.

இவ்வாறு தேடியதில் செந்தில் வேல் அவர்களின் டிவீட் என்று வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட்டின் பின்புலத்தில் இருந்த உண்மைத்தன்மை நமக்கு தெளிவாகியது.

உண்மையில் வன்னி அரசு பதிவிட்டதாக வைரலாகும் டிவீட், வன்னி அரசு பதிவிட்டதே அல்ல; அது வன்னி அரசு பெயரில் இயங்கும் போலிக் கணக்கிலிருந்து பதிவிட்டதாகும்.

வன்னி அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கின் ஐடி @VanniKural என்பதாகும். ஆனால் வைரலாகும் டிவீட் @VannikKural (இதில் ஒரு ‘k’ கூடுதலாக உள்ளது) என்கிற ஐடியிலிருந்து பதிவிடப்பட்டுள்ளது. மேலும் அந்த ஐடியிலேயே ‘The official Parody Account of வன்னி அரசு‘என்று குறிப்பிடப்பட்டுள்ளதை காண முடிந்தது.

ஸ்டாலினிடம் ₹200 படிக்காசு பெற்றுக்கொண்டேன் என்று எக்ஸ் தளத்தில் வன்னி அரசு பதிவு

வாசகர்களின் புரிதலுக்காக வன்னி அரசின் உண்மையான டிவிட்டர் கணக்கையும், அவர் பெயரில் இயங்கும் போலி கணக்கையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

ஸ்டாலினிடம் ₹200 படிக்காசு பெற்றுக்கொண்டேன் என்று எக்ஸ் தளத்தில் வன்னி அரசு பதிவு

 Also Read: மின்சார கட்டணத்தை உயர்த்தவிருக்கின்றதா திமுக அரசு?

Conclusion

ஸ்டாலினிடம் ₹200 படிக்காசு பெற்றுக்கொண்டேன் என்று எக்ஸ் தளத்தில் வன்னி அரசு பதிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் ஸ்க்ரீன்ஷாட் உண்மையில் அவர் பெயரில் இயங்கும் போலிக் கணக்கில் பதிவிடப்பட்டது என்பது கிடைத்த ஆதாரங்களின் மூலம் தெளிவாகின்றது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
X post by Parody Account of Vanni Arasu, Dated 11th May 2024.

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular