ஞாயிற்றுக்கிழமை, மே 19, 2024
ஞாயிற்றுக்கிழமை, மே 19, 2024

HomeFact Checkஇந்தியா கூட்டணி 304 இடங்களை பெறும் என்று கருத்துக்கணிப்பு வெளியிட்டதா இந்தியா டுடே?

இந்தியா கூட்டணி 304 இடங்களை பெறும் என்று கருத்துக்கணிப்பு வெளியிட்டதா இந்தியா டுடே?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: இந்தியா கூட்டணி 304 இடங்களை பெறும் என்று கருத்துக்கணிப்பு வெளியிட்டது இந்தியா டுடே.

Fact: வைரலாகும் கருத்துக்கணிப்பு எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.

“சங்கிகளுக்கு சங்கு ஊதிக்கொண்டே இருக்கிறார்கள் தற்போதைய நிலவரப்படி 150க்கு கீழே முக்குவதாக ரிசல்ட் வருகிறது” என்று குறிப்பிட்டு இந்தியா டுடேவின் கருத்துக்கணிப்பு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அக்கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு 304 இடங்களும், பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு 197 இடங்களும், மற்றவைகளுக்கு 42 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியா கூட்டணி 304 இடங்களை பெறும் என்று இந்தியா டுடே கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக வைரலாகும் படம்

X Link | Archive Link

இந்தியா கூட்டணி 304 இடங்களை பெறும் என்று இந்தியா டுடே கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக வைரலாகும் படம்

X Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: இந்துக்களின் அலமாரியை உடைத்து முஸ்லீம்களுக்கு பணம் கொடுப்போம் என்றாரா கார்கே?

Fact Check/Verification

இந்தியா கூட்டணி 304 இடங்களை பெறும் என்று இந்தியா டுடே கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அப்படம் குறித்து தேடினோம்.

இத்தேடலில் ‘Modi 3.0 is Mood of the Nation, survey predicts 335 seats for NDA’ என்று தலைப்பிட்டு  இந்தியா டுடே வெளியிட்டிருந்த செய்தியில் உண்மையான கருத்துக்கணிப்பு படம் வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அப்படத்தில் இந்தியா கூட்டணிக்கு 166 இடங்களும், என்டிஏ கூட்டணிக்கு 335 இடங்களும், மற்றவைகளுக்கு 42 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது

இந்தியா கூட்டணி 304 இடங்களை பெறும் என்று இந்தியா டுடே கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக வைரலாகும் படம்
இந்தியா டுடேவில் வெளிவந்த செய்தி

இதனடிப்படையில் பார்க்கையில் இந்தியா கூட்டணிக்கு 166 க்கு பதிலாக 304ஐயும், என்டிஏ கூட்டணிக்கு 335க்கு பதிலாக 197ஐயும் மாற்றி எடிட் செய்து வைரலாகும் படம் உருவாக்கப்பட்டுள்ளது என அறிய முடிகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான கருத்துக்கணிப்பு படத்தையும் எடிட் செய்யப்பட்ட கருத்துக்கணிப்பு படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

தொடர்ந்து தேடுகையில் இந்தியா டுடேவின் சமூக ஊடகப் பக்கங்களிலும் என்டிஏ கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கும் இதே கருத்துக்கணிப்பு படம் பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.

 Also Read: பாம்பு கடித்த இளைஞருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காமல் கங்கையில் மிதக்க வைத்ததால் உயிரிழந்தாரா?

Conclusion

இந்தியா கூட்டணி 304 இடங்களை பெறும் என்று இந்தியா டுடே கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்ட போலி புகைப்படமாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Tweet from India Today, Dated February 08, 2024
Report from India Today, Dated February 08, 2024

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular