வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkஉச்சநீதிமன்ற பதவியேற்பில் தமிழில் பேசிய நீதிபதி மகாதேவன் என்கிற வீடியோ தகவல் உண்மையா?

உச்சநீதிமன்ற பதவியேற்பில் தமிழில் பேசிய நீதிபதி மகாதேவன் என்கிற வீடியோ தகவல் உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: உச்சநீதிமன்ற பதவியேற்பில் தமிழில் பேசிய நீதிபதி மகாதேவன்

Fact: வைரலாகும் வீடியோ அவரது சென்னை பிரிவுபச்சார நிகழ்வில் எடுக்கப்பட்டதாகும்.

உச்சநீதிமன்ற பதவியேற்பு விழாவில் தமிழில் பேசிய நீதிபதி மகாதேவன் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“உச்ச நீதிமன்றத்தில் பதவியேற்பு நிகழ்வில் தமிழில் ஏற்புரை தந்த தமிழ் மீதும் மொழி மீதும் பற்று கொண்ட தமிழறிஞர், மாண்புமிகு உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் அவர்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள்” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.

Screenshot from facebook/muthuramalinga.andavar

Facebook Link/Archived Link

Screenshot from facebook/Kanniyaagencey

Facebook Link/Archived Link

Screenshot from facebook/advsurulirajan.advsuruliraja

Facebook Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ஆம்ஸ்ட்ராங்கிடம் வெறும் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வென்றாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?

Fact Check/Verification

உச்சநீதிமன்ற பதவியேற்பு விழாவில் தமிழில் பேசிய நீதிபதி மகாதேவன் என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

நீதிபதி மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற வீடியோவைக் காணும்போது அதில் எங்கும் அவர் வைரல் வீடியோவில் இருப்பதைப் போன்று உரையாற்றியிருக்கவில்லை.

தொடர்ந்து, வைரல் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து தேடியபோது கடந்த ஜூலை 16, 2024 அன்று  “நீதிபதி மகாதேவனுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரிவு உபச்சார விழா” என்று நியூஸ் 7 தமிழ் வெளியிட்டிருந்த செய்தி வீடியோ நமக்குக் கிடைத்தது.

அதில், வைரலாகும் வீடியோ உரை இடம்பெற்றிருந்தது. குறிப்பிட்ட வீடியோ அவரது உச்ச நீதிமன்ற உரை என்று பரவுகிறது என்பது உறுதியாகியது.

  Also Read: பெரியார் பற்றி பேசிய பயாஸ் ஹூசைனுடன் அண்ணாமலை என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Conclusion

உச்சநீதிமன்ற பதவியேற்பு விழாவில் தமிழில் பேசிய நீதிபதி மகாதேவன் என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
Facebook Post From, News 7 Tamil, Dated July 16, 2024

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular