ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 21, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 21, 2024

HomeFact Checkபெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கு காரணமானவர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டாரா?

பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கு காரணமானவர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கு காரணமானவன் ஆந்திராவில் கைது செய்யப்பட்டான்.

Fact: இத்தகவல் தவறானதாகும்.  ஆந்திராவில் கைது செய்யப்பட்டவனுக்கும் பெங்களூர் குண்டுவெடிப்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

“பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கு காரணமான PFI ஆர்வலர் சலீம், ஒய்எஸ்ஆர் கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் NIA யால் கைது செய்யப்பட்டார்” என்று குறிப்பிட்டு தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கு காரணமான சலீம் என்பவர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டதாக பரவும் தகவல்

X | Archive Link

பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கு காரணமான சலீம் என்பவர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டதாக பரவும் தகவல்

Archive Link

பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கு காரணமான சலீம் என்பவர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டதாக பரவும் தகவல்

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தமிழகத்தில் ’என் மண் என் மக்கள்’ யாத்திரையால் மாற்றம் நிகழும் எனப் பாராட்டினாரா காங்கிரஸ் எம்பி ஜோதிமணி?

Fact Check/Verification

பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கு காரணமான சலீம் என்பவர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம்.

இத்தேடலில் PFI வழக்கில் அப்துல் சலீமை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்ததாக கூறி வைரலாகும் படத்திலிருக்கும் அதே நபரின் படத்துடன் ஈடிவி பாரத் செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கு காரணமான சலீம் என்பவர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டதாக பரவும் தகவல்

தொடர்ந்து தேடுகையில் ‘NIA arrests accused on the run in Nizamabad PFI case’ என்று தலைப்பிட்டு நிஜாமாபாத் பிஎஃப்ஐ  வழக்கில் இரணடு வருடங்களாக தேடப்பட்டு வந்த சலீம் என்பவரை இந்திய தேசிய புலனாய்வு நிறுவனம் கைது செய்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கு காரணமான சலீம் என்பவர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டதாக பரவும் தகவல்

கைது செய்யப்பட்ட இந்நபர் இந்திய அரசால் தடைப்பட்ட செய்யப்பட்ட இயக்கமான பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் (பிஎஃப்ஐ ) தெலங்கானா வடக்கு பகுதியின் மாநிலச் செயலாளராக இருந்ததாகவும், தலைமறைவாக இருந்த இவரை பிடித்து தருபவர்களுக்கு 2 லட்சம் சன்மானம் அளிப்பதாக இந்திய தேசிய புலனாய்வு நிறுவனம் அறிவித்திருந்தாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நிஜமாபாத் பிஎஃப்ஐ வழக்கு என்றால் என்ன?

அப்துல் சலீம் உள்ளிட்ட 11 பிஎஃப்ஜ உறுப்பினர்கள் முஸ்லீம் இளைஞர்களை வெறுப்பு பிரச்சாரத்தின் மூலம் பிஎஃப்ஐ-யில் இணைத்து, அவர்களுக்கு பயிற்சி அளித்து, நாட்டிற்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்தி வந்துள்ளனர். இதன் காரணமாக இவர்கள் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் தேசிய புலனாய்வு நிறுவனம் ஆறு பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்தது.

பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கு காரணமான சலீம் என்பவர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டதாக பரவும் தகவல்

இதனையடுத்து கைது செய்யப்பட்ட அப்துல் சலீமுக்கும் பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்துக்கும் ஏதாவது தொடர்புள்ளதா என அறிய பெங்களூர் சிட்டி போலீஸ் கமிஷ்னர் எஸ்.பி. தயானந்தை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக் கொண்டு பேசினோம்.  அவர் வைரலாகும் இத்தகவல் தவறானது என்றும், இவ்வழக்கு தொடர்பாக ஆந்திராவில் யாரையும் கைது செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து தேடுகையில் பெங்களூர் போலீஸ் கமிஷ்னரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இவ்வழக்கானது கிரைம் மாற்றப்பட்டதாகவும், இதுவரை யாரும் இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்படவில்லை என்று கடந்த சனிக்கிழமை அன்று (மார்ச் 02) பதிவு ஒன்று பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. தொடர்ந்து இதற்கு மறுநாள் ஞாயிற்றுக் கிழமை (மார்ச் 03) தவறான தகவல்களை செய்தியாக வெளியிட வேண்டாம் என்று ஊடகங்களுக்கு விண்ணப்பம் தெரிவித்து மற்றொரு பதிவை பதிவிட்டிருந்ததையும் காண முடிந்தது. 

இதனையடுத்து தேடுகையில் பெங்களூர் குண்டுவெடிப்புக்கு காரணமானவன் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 10 இலட்சம் ரூபாய் பரிசளிக்கப்படும் என்று தேசிய புலனாய்வு நிறுவனம் அதன் எக்ஸ் பக்கத்தின் வாயிலாக அறிவித்திருந்ததை காண முடிந்தது. இந்த அறிவிப்பானது இன்று (மார்ச் 06) வெளியிடப்பட்டிருந்தது.

கிடைத்த ஆதாரங்களின் மூலம் நமக்கு தெளிவாகுவது யாதெனில்,

  1. பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கு காரணமான குற்றவாளி இதுவரை கைது செய்யப்படவில்லை.
  2. ஆந்திராவில் கைது செய்யப்பட்ட அப்துல் சலீமுக்கும் பெங்களூர் குண்டுவெடிப்புக்கும் எவ்வித தொடர்புமில்லை.  

Also Read: இந்தியா கூட்டணியின் பாட்னா பேரணி என்று பரவும் 2017ஆம் ஆண்டு புகைப்படம்!

Conclusion

பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கு காரணமான சலீம் என்பவர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Report from ETV Bharat, Dated March 04, 2024
Report from Times of India, Dated March 03, 2024
Press Release from NIA
Tweet from Bengaluru Police Commissioner, Dated March 03, 2024
Tweet from NIA India, Dated March 06, 2024
Conversation with S.P. Dayanand, Bangalore city Police commissioner

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular