செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 13, 2024
செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 13, 2024

HomeFact Checkதிமுக ஆட்சியில் குடித்துவிட்டு நடனமாடும் நபர் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

திமுக ஆட்சியில் குடித்துவிட்டு நடனமாடும் நபர் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: திமுக ஆட்சியில் குடித்துவிட்டு நடனமாடும் நபர்

Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோ கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்தே பரவுகிறது.

திமுக ஆட்சியில் குடித்துவிட்டு நடனமாடும் நபர் என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“என்ன Brandன்னு சொல்லீட்டு ஆடு சாமி. #திராவிடியா_மாடல்” என்று இந்த வீடியோ பரவுகிறது.

Screenshot from x @Johni_raja

X Link/Archived Link

Screenshot from facebook/vidyapathi.ttv

Facebook Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தமிழ்நாட்டிற்கு ஏன் நிதி ஒதுக்கவேண்டும் என்றாரா நிர்மலா சீதாராமன்?

Fact Check/Verification

திமுக ஆட்சியில் குடித்துவிட்டு நடனமாடும் நபர் என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அந்த வீடியோ கடந்த 2018ஆம் ஆண்டு முதலே பல்வேறு மொழிகளிலும் வைரலாகி வருவது நமக்குத் தெரிய வந்தது. அந்த வீடியோவில் சக்திமான் தொடர் பாடல் இடம்பெற்றுள்ள நிலையில் தற்போது வைரலாகும் வீடியோவில் வேறொரு பாடல் எடிட் செய்யப்பட்டுள்ளது.

உண்மையில் அந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது அறிய முடியாவிட்டாலும் குறிப்பிட்ட வீடியோ வைரலாகிய காலகட்டத்தில் தமிழகத்தில் அஇஅதிமுக ஆட்சி நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோவே தற்போது திமுக ஆட்சியில் குடித்துவிட்டு நடனமாடும் நபர் என்பதாக பரவுகிறது.

Also Read: சிருங்கேரி நூலகத்தில் உள்ள 1967ஆம் ஆண்டு கனகவர்ஷினி ஓவியம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Conclusion

திமுக ஆட்சியில் குடித்துவிட்டு நடனமாடும் நபர் என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
Facebook Post from, School last bench student, Dated December 12, 2018

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular