வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 27, 2024
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 27, 2024

HomeFact CheckViralசங்கரன்கோயில் அருகே சிங்கம் உலா வருவதாகப் பரவும் குஜராத் வீடியோ!

சங்கரன்கோயில் அருகே சிங்கம் உலா வருவதாகப் பரவும் குஜராத் வீடியோ!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: சங்கரன்கோயில் அருகே வலம் வரும் சிங்கம்

Fact: வைரலாகும் வீடியோ குஜராத்தைச் சேர்ந்ததாகும்.

சங்கரன்கோயில் அருகே சிங்கம் உலா வருவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் தென்மலையிலிருந்து முக்கு ரோடு மார்க்கமாக ராஜபாளையம் சங்கரன் கோயில் செல்பவர்கள் அல்லது அங்கிருந்து திரும்புவோர்களுக்கு தகவல் சொல்லவும் சிங்கம் ஒன்று வழி தவறி வந்துள்ளது அதை வனத்துறையினர் பிடிக்கும் வரை சற்று பாதுகாப்புடன் எச்சரிக்கையுடனும் அவர்களை பயணம் செல்லுமாறு அறிவுறுத்தவும் செல்பவர்களும் சற்று கவனத்துடன் செல்லவும்” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.

Screenshot from Facebook/Vijayalakshmi Seeniraj

Facebook Link/Archived Link

Screenshot from Facebook/s.v.karaigandhiraj

Facebook Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: விஜய் நடித்த GOAT திரைப்படம் குறித்து எதிர்மறை விமர்சனம் செய்த ரசிகர் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check/Verification

சங்கரன்கோயில் அருகே சிங்கம் உலா வருவதாகப் பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவை ஆராய்ந்தபோது அதன் பின்புலத்தில் வடமொழி எழுத்துக்களில் வாசகங்கள் அடங்கிய போர்டுகள் இடம்பெற்றிருப்பதை நம்மால் காண முடிந்தது. அந்த எழுத்துக்களை ஆராய்ந்தபோது அவை குஜராத்தி மொழி என்பதையும் நம்மால் அறிய முடிந்தது.

தொடர்ந்து, வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ஆராய்ந்தபோது கடந்த ஆகஸ்ட் மாதம், குஜராத் அம்ரேலியில் பெட்ரோல் பங்க் ஒன்றின் அருகில் சிங்கம் ஒன்று இரவில் வலம் வந்த காட்சி குறித்த செய்தி Network News, நியூஸ் 18 குஜராத்தி, குஜராத் பர்ஸ்ட் உள்ளிட்ட பல்வேறு செய்தி ஊடகங்களிலும் வெளியாகியிருந்தது.

குறிப்பிட்ட செய்திகளில் இடம்பெற்றுள்ள வீடியோவும், தற்போது சங்கரன்கோயில் என்று பரவும் வீடியோவும் ஒன்றே என்பதை நம்மால் அறிய முடிந்தது. குஜராத் வீடியோவே தற்போது தமிழகத்தில் சிங்கம் உலா வருவதாகப் பரவி வருகிறது.

 Also Read: சென்னையில் நடைபெற்ற F4 கார் ரேஸில் கலந்து கொண்டாரா நடிகை நிவேதா பெத்துராஜ்?

Conclusion

சங்கரன்கோயில் அருகே சிங்கம் உலா வருவதாகப் பரவும் வீடியோ உண்மையில் குஜராத்தைச் சேர்ந்தது என்பது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Report from News 18 Gujrat, Dated August 20, 2024
YouTube Video from Network News, Dated August 21, 2024


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular