வியாழக்கிழமை, மே 2, 2024
வியாழக்கிழமை, மே 2, 2024

HomeFact Checkவிஜய் தொலைக்காட்சியில் முத்துராமலிங்க தேவரை போற்றும் பாடல் ஒளிபரப்பப்பட்டதா?

விஜய் தொலைக்காட்சியில் முத்துராமலிங்க தேவரை போற்றும் பாடல் ஒளிபரப்பப்பட்டதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: விஜய் தொலைக்காட்சியில் முத்துராமலிங்க தேவரை போற்றும் பாடல் ஒளிபரப்பப்பட்டது.

Fact: வைரலாகும்  வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.

தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் முத்துராமலிங்க தேவரை போற்றும் பாடலான ‘முக்குலத்து வீர சிங்கம், முத்துராமலிங்க தங்கம்…’ எனும் பாடல் ஒளிபரப்பு செய்யப்பட்டதாக கூறி வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.

விஜய் தொலைக்காட்சியில் முத்துராமலிங்க தேவரை போற்றும் பாடல் ஒளிபரப்பு செய்யப்பட்டதாக வைரலாகும் வீடியோ

Twitter Link | Archived Link

விஜய் தொலைக்காட்சியில் முத்துராமலிங்க தேவரை போற்றும் பாடல் ஒளிபரப்பு செய்யப்பட்டதாக வைரலாகும் வீடியோ

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: குஜராத்தின் இரண்டு வழிச்சாலை என பரவும் பல்கேரியா நாட்டின் சாலை!

Fact Check/Verification

விஜய் தொலைக்காட்சியில் முத்துராமலிங்க தேவரை போற்றும் பாடல் ஒளிபரப்பு செய்யப்பட்டதாக கூறி வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்.

அத்தேடலில் விஜய் தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வைரலாகும் வீடியோ பிப்ரவரி 01, 2017 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதை காண முடிந்தது. ஆனால் அவ்வீடியோவில் முத்துராமலிங்க தேவரை போற்றும் பாடல் இடம்பெற்றிருக்கவில்லை. மாறாக பாடகி சித்ரா பாடிய பாடல்களை ஒன்றாக கோர்த்து மெட்லி (Medly) முறையில் பாடப்பட்ட பாடலே இடம்பெற்றிருந்தது (மெட்லி என்பது வாத்தியக் கருவிகள் இல்லாமல் குரல் வழியாக அமைக்கப்படும் இசையாகும்).

இதனடிப்படையில் பார்க்கையில் உண்மையான ஆடியோவை எடிட் செய்து நீக்கி, அதற்கு பதிலாக முத்துராமலிங்க தேவரை போற்றும் பாடல் சேர்க்கப்பட்டு போலியாக இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகின்றது.

Also Read: நோட்டாவை விட பாஜக விரைவில் தமிழகத்தில் அதிக ஓட்டு வாங்கும் என்று கூறினாரா பிரசாந்த் கிஷோர்?

Conclusion

விஜய் தொலைக்காட்சியில் முத்துராமலிங்க தேவரை போற்றும் பாடல் ஒளிபரப்பு செய்யப்பட்டதாக வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Video

Our Sources
Youtube Video from Vijay Television, Dated February 01, 2017

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular