வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 27, 2024
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 27, 2024

HomeFact Checkமது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக சார்பில் சி.வி.சண்முகம் பங்கேற்கவிருக்கின்றாரா?

மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக சார்பில் சி.வி.சண்முகம் பங்கேற்கவிருக்கின்றாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக சார்பில் சி.வி.சண்முகம் பங்கேற்கவிருக்கின்றார்.

Fact: இத்தகவல் தவறானது என்று சி.வி.சண்முகம் தரப்பு மறுத்துள்ளது.

வரும் அக்டோபர் 2 ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டை நடத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி திட்டமிட்டுள்ளது. இம்மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியிருந்த நிலையில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இம்மாநாட்டில் கலந்துக்கொள்ளவிருப்பதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக சார்பில் சி.வி.சண்முகம் பங்கேற்கவிருக்கின்றார்.

X Link | Archive Link

மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக சார்பில் சி.வி.சண்முகம் பங்கேற்கவிருக்கின்றார்.

Archive Link

மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக சார்பில் சி.வி.சண்முகம் பங்கேற்கவிருக்கின்றார்.

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த விஜய் ரசிகர்கள்; வைரலாகும் தகவல் உண்மையானதா?

Fact Check/Verification

மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக சார்பில் சி.வி.சண்முகம் பங்கேற்கவிருப்பதாக தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து முன்னதாக சி.வி.சண்முகத்தை தொடர்புக் கொண்டு வைரலாகும் இத்தகவல் குறித்து விசாரித்தோம். அவர் இத்தகவல் தவறானது என்று மறுப்பு தெரிவித்தார்.

இதையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது நியூஸ் ஜே தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் நியூஸ் ஜே தொலைக்காட்சி இவ்வாறு செய்தியை வெளியிட்டிருக்கவில்லை என அறிய முடிந்தது.

இதனையடுத்து நியூஸ் ஜே தொலைக்காட்சியின் ஆசிரியரை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இந்த கார்டை எங்கள் நிறுவனம் வெளியிடவில்லை என்று பதிலளித்தார்.

தொடர்ந்து இக்கார்டு போலியானது என்று நியூஸ் ஜே தொலைக்காட்சியின் எக்ஸ் பக்கத்திலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

 Also Read: திமுக ஆட்சியில் மாணவிகள் பள்ளியில் மது அருந்தியதாக பரவும் பழைய வீடியோ!

Conclusion

மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக சார்பில் சி.வி.சண்முகம் பங்கேற்கவிருப்பதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Phone Conversation with C.V.Shanmugam, EX-Minister, AIADMK
X post from News J, Dated September 17, 2024

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular