திங்கட்கிழமை, ஜூன் 24, 2024
திங்கட்கிழமை, ஜூன் 24, 2024

HomeFact Checkநேரு அவர்களால் உருவாக்கப்பட்ட இரயில் தடமா இது ?

நேரு அவர்களால் உருவாக்கப்பட்ட இரயில் தடமா இது ?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

நமது முன்னாள் பாரதப் பிரதமர் நேரு அவர்களால் உருவாக்கப்பட்ட இரயில் தடம் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது.

நேரு அவர்களால் கட்டப்பட்ட ரயில் தடம் என்று வைரலாகும் படம்.
வைரலாகும் படம்.

Fact Check/Verification

நமது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பொதுத்துறைகளை தனியாருக்கு அளிக்கும் திட்டம் ஒன்றை அண்மையில் அறிவித்தார்.

இதுக்குறித்து  பலத்தரப்பட்டவர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களும் கண்டனங்களும் தோன்றி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, நேரு அவர்களால் உருவாக்கப்பட்ட இரயில் தடம் என்று ஒரு இரயில் தடத்தின் புகைப்படத்தை பதிவிட்டு இத்திட்டத்தை விமர்சித்து வருகின்றனர்.

இதைப் பலரும் தங்கள் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.

https://www.facebook.com/106633860785016/photos/a.106636294118106/313300186785048/

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் இரயில் தடம் உண்மையிலேயே நேரு அவர்களால்தான் உருவாக்கப்பட்டதா என்பதை அறிய வைரலாகும் படத்தை குறித்து நியூஸ் செக்கர் சார்பில் ஆராய்ந்தோம்.

உண்மை என்ன?

வைரலாகும்  படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆராய்ந்தபோது, வைரலாகும் இரயில்தடம் குறித்த உண்மைகள் நமக்குத் தெரிய வந்தது.

உண்மையில்  நேரு அவர்களால் உருவாக்கப்பட்டது என்று பரப்பப்படும் இரயில்தடமானது இந்தியாவிலேயே இல்லை. அத்தடங்கள் இலண்டன் மாநகரில் உள்ள கிளாபெம் ஜங்ஷனில் உள்ள இரயில் தடமாகும்.

நமது தேடலில் வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் இரயில் தடமானது  இலண்டன் கிளாபெம் ஜங்ஷனுக்கு அருகில் இருக்கும் ரயில் தடம் என்று தெரிய வந்தது. அதை உறுதிப்படுத்த,  “railway track near clapham junction”  எனும் கீ வேர்டை பயன்படுத்தி கூகுளில் தேடினோம்.

அதில், alamy.com எனும்  புகைப்பட இணையத் தளத்தில்  கிளாபம் ஜங்ஷன் குறித்தப் புகைப்படங்கள்  குறித்த பக்கம் இருப்பதை நம்மால் காண முடிந்தது.

அந்தப் பக்கத்தில் நுழைந்து தேடியபோது, வைரலானப் புகைப்படத்தையும் அதிலே  நம்மால் காண முடிந்தது.

நேரு அவர்களால் உருவாக்கப்பட்ட ரயில் தடம் என்று பரப்பப்பட்ட ரயில்தடத்தின் புகைப்படம் alamy.com-ல் இடம்பெற்றுள்ளது.
alamy.com-ல் இடம்பெற்றுள்ளப் புகைப்படம்

வாசகர்களின் புரிதலுக்காக வைரலாகும் புகைப்படத்தையும், alamy.com-ல் இடம்பெற்றுள்ளப் புகைப்படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Conclusion

நம் விரிவான ஆய்வுக்குப்பின் நேரு அவர்களால் உருவாக்கப்பட்ட இரயில் தடம் என்று பகிரப்படம் இரயில் தடமானது நேருவால் உருவாக்கப்பட்டது அல்ல. அது இலண்டனில் உள்ள இரயில்தடம் என்று தெளிவாகியுள்ளது.

Result: False


Our Sources

Facebook Profile: https://www.facebook.com/770890773250983/photos/a.770918219914905/1263968547276534/

Facebook Profile: https://www.facebook.com/106633860785016/photos/a.106636294118106/313300186785048/

Twiitter Profile: https://twitter.com/bP8KF3cZyA1Puye/status/1292903094448033792

Twiitter Profile: https://twitter.com/ThenarasuNa/status/1292971173299359744

Getsurrey.co.uk: https://www.getsurrey.co.uk/news/surrey-news/clapham-waterloo-train-delays-live-17272308

Alamy.com: https://www.alamy.com/stock-photo-trains-approach-and-depart-from-clapham-junction-station-in-london-52463393.html


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular