Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
Claim: பழனி பஞ்சாமிர்தத்திற்கும் நெய் வழங்கிய இஸ்லாமியர்களால் நடத்தப்படும் நிறுவனம்
Fact: வைரலாகும் புகைப்படம் பாகிஸ்தானை சேர்ந்த நிறுவனத்துடையதாகும். மேலும், ஆவின் நிறுவனமே பழனிக்கு நெய் வழங்குகிறது.
பழனி பஞ்சாமிர்தத்திற்கும் இஸ்லாமியர்களால் நடத்தப்படும் நிறுவனம் நெய் வழங்குவதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”திருப்பதிக்கு லட்டுக்கு நெய் supply செய்த AR foods நிறுவனம் யாருடையது என்று பாரீர் ! இதே போல் பழனி திருத்தணி முருகன் கோயிலில் பல கோவில்களுக்கு பிரசாதம் தயாரித்து விற்கும் திராவிடியா திமுக மூலம் contract பெற்றுள்ளதும் இந்த அரேபிய கும்பலே!” என்று இந்த புகைப்படம் பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
பழனி பஞ்சாமிர்தத்திற்கும் இஸ்லாமியர்களால் நடத்தப்படும் நிறுவனம் நெய் வழங்குவதாகப் பரவும் செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் பதிவில் இடம்பெற்றுள்ள புகைப்படம் ஏற்கனவே திருப்பதி லட்டுவிற்கு நெய் வழங்கிய AR Dairy Foods நிறுவனத்தினர் அனைவரும் இஸ்லாமியர்கள் என்று பரவிய நிலையில் வைரல் பதிவில் இடம்பெற்றிருந்த நிறுவனம் உண்மையில் பாகிஸ்தானில் செயல்பட்டு வருகின்ற மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு நிறுவனம் என்று நாம் ஏற்கனவே NewsChecker மூலமாக உண்மை கண்டறிந்து விளக்கமளித்திருந்தோம்.
தொடர்ந்து, பாஜகவின் செல்வகுமார் AR Dairy Food நிறுவனமே பழனி பஞ்சாமிர்தத்திற்கும் நெய் வழங்கியதாக குற்றம் சாட்டிய நிலையில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆவின் நெய்யில்தான் பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது என்றும்; தேவைக்கு அதிகமாக வாங்கப்படும் மற்ற நெய்கள் கூட குறிப்பிட்ட AR Dairy நிறுவனத்திடம் இருந்து வாங்கியிருக்கவில்லை என்றும் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளோம். அதனையும் விரைவில் இங்கே இணைக்கிறோம்.
Also Read: திருப்பதி லட்டுவிற்கு நெய் வழங்கிய நிறுவனம் இஸ்லாமியர்களால் நடத்தப்படுவதாக பரவும் பொய்!
Conclusion
பழனி பஞ்சாமிர்தத்திற்கும் இஸ்லாமியர்களால் நடத்தப்படும் நிறுவனம் நெய் வழங்குவதாகப் பரவும் செய்தி தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Sources
RocketReach page, AR Foods (Pvt) Limited
Raaj Milk website
HT report, September 21, 2024
YouTube Video From, Sun News Tamil
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.