வியாழக்கிழமை, செப்டம்பர் 26, 2024
வியாழக்கிழமை, செப்டம்பர் 26, 2024

HomeFact Checkஇயக்குநர் மிஷ்கின் மகள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

இயக்குநர் மிஷ்கின் மகள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: என் மகளிடம் நான் என் மனைவியை கைவிட்டது போல் நீ உன் அம்மாவை கைவிட்டு விடாதே என்று சொல்லி தான் வளர்த்தேன் – இயக்குனர் மிஷ்கின்

Fact: வைரலாகும் புகைப்படத்தில் மிஷ்கினுடன் இருப்பது தொகுப்பாளினி சுபா ராஜேந்திரன் ஆவார்.

இயக்குநர் மிஷ்கின் மகள் என்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“என் மனைவிக்கு எனக்கு பாலமாக என் மகள் தான் இருக்கறாள், என் மகளிடம் நான் என் மனைவியை கைவிட்டது போல் நீ உன் அம்மாவை கைவிட்டு விடாதே என்று சொல்லி தான் வளர்த்தேன் – இயக்குனர் மிஷ்கின்” என்று இந்த புகைப்படம் பரவி வருகிறது.

இயக்குநர்
Screenshot from Facebook/Rajarajesh Warman

Facebook Link/Archived Link

Screenshot from Facebook/anu.szivan

Facebook Link/Archived Link

Screenshot from Facebook/m.c.sujesh

Facebook Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.    

Also Read: திருப்பதி லட்டு விவகாரம் குறித்து பேசியதால் பியூஷ் மனுஷ் மீது தாக்குதல் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Fact Check/Verification

இயக்குநர் மிஷ்கின் மகள் என்று பரவும் புகைப்படம்  குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அதில் மிஷ்கினுடன் இருப்பவர் தொகுப்பாளினியான சுபா ராஜேந்திரன் என்பதை நம்மால் அறிய முடிந்தது.

Instagram will load in the frontend.

கடந்த ஜனவரி 15, 2024 அன்று இப்புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள சுபா ராஜேந்திரன், “Pongal with Sir” என்றும் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து, தனது குடும்பம் குறித்தி மிஷ்கின் பேசியுள்ளாரா என்று ஆராய்ந்தபோது கடந்த 2017ஆம் ஆண்டு புதுயுகம் டிவிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் வைரல் புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள கருத்தைக் கூறியுள்ளார். அதனையே தற்போது தொகுப்பாளருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் இணைத்து பரப்பி வருகின்றனர்.

 Also Read: திருப்பதி லட்டுவிற்கு நெய் வழங்கிய நிறுவனம் இஸ்லாமியர்களால் நடத்தப்படுவதாக பரவும் பொய்!

Conclusion

இயக்குநர் மிஷ்கின் மகள் என்று பரவும் புகைப்படம் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources
Instagram Post From, Subha Rajendran, Dated January 15, 2024
YouTube Video From, Puthuyugam Tv, Dated October 10, 2017

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular