வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkஅதிமுகவினருக்கு விஜய் ரசிகர்கள் அரிவாளுடன் கொலை மிரட்டல் என்று பரவுவது சமீபத்திய வீடியோவா?

அதிமுகவினருக்கு விஜய் ரசிகர்கள் அரிவாளுடன் கொலை மிரட்டல் என்று பரவுவது சமீபத்திய வீடியோவா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: அரிவாளை காட்டி ஆபாசமாக பேசி அதிமுகவினருக்கு விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல்
Fact: வைரலாகும் வீடியோ கடந்த 2018ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகும்.

அதிமுகவினருக்கு கைகளில் அரிவாளுடன் கொலை மிரட்டல் விடுத்த தவெக தலைவர் மற்றும் நடிகர் விஜய் ரசிகர்கள் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“என்னடா இதல்லாம் இப்படி பேசுறது விஜய் பெயரக் கெடுக்காதா தூக்கி உள்ள போடுங்க.” என்று மாநாடு நடைபெறுவதற்கு முன்பே விஜய் அரசியல் வாழ்க்கையில் விளையாடும் தொண்டர்கள் என்பதாக இந்த வீடியோ பரவி வருகிறது.

அதிமுகவினருக்கு
Screenshot from X @sumiitweetz

X Link/Archived Link

Screenshot from X @ThanthiTV

X Link/Archived Link/Archived Link2

Screenshot from X @manickamainthan

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பிரபாகரன் பெயரை பயன்படுத்தி பணம் வசூலிப்பவர்களை ஒற்றைப் பனைமரம் அம்பலப்படுத்தும்… வைரலாகும் நியூஸ்கார்டுகள் உண்மையானதா?

Fact Check/Verification

அதிமுகவினருக்கு கைகளில் அரிவாளுடன் கொலை மிரட்டல் விடுத்த தவெக தலைவர் மற்றும் நடிகர் விஜய் ரசிகர்கள் என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

 வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ஆராய்ந்தபோது அதுபற்றி கடந்த டிசம்பர் 07, 2018ஆம் ஆண்டு வெளியாகிய செய்தி ஒன்று நமக்குக் கிடைத்தது.

அதில், “விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான சர்கார் படத்தில், அரசின் இலவச திட்டங்களை விமர்சித்து காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அரசு வழங்கிய இலவச மிக்ஸி, கிரைண்டரை தீயில் எரிப்பது போல காட்சிகள் இருந்தது. இதற்கு அமைச்சர்கள் கண்டனம்  தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அமைச்சர்களை அரிவாளைக் காட்டி  மிரட்டும் வகையில் வீடியோ ஒன்றை அனிஷேக் என்பவர் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் லிங்கதுரை மற்றும் சஞ்சய் என்கிற நபர்கள் அதிமுக அமைச்சர்களை அவதூறாக அரிவாளைக் காட்டி மிரட்டிய நிலையில் சஞ்சய், அனிஷேக் ஆகியோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்” என்கிற செய்தி வெளியாகியுள்ளது.

குறிப்பிட்ட வீடியோவே, தற்போது தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டை ஒட்டி அரிவாளைக்காட்டி மிரட்டும் விஜய் ரசிகர்கள் என்பதாக பரவி வருகிறது. ஆனால், அந்த வீடியோ 2018ஆம் ஆண்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறாக பேசினாரா ஆர்.பி.உதயகுமார்?

Conclusion

அதிமுகவினருக்கு கைகளில் அரிவாளுடன் கொலை மிரட்டல் விடுத்த தவெக தலைவர் மற்றும் நடிகர் விஜய் ரசிகர்கள் என்று பரவும் வீடியோ கடந்த 2018ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
YouTube video from Puthiyathalaimurai, Dated December 07, 2018
Report from, News 18 Tamil Nadu, Dated December 07, 2018


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular