சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Checkஇந்து நாய்களின் ஓட்டுகள் எங்களுக்குத் தேவையில்லை என்றாரா திருமாவளவன்?

இந்து நாய்களின் ஓட்டுகள் எங்களுக்குத் தேவையில்லை என்றாரா திருமாவளவன்?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: இந்து நாய்களின் ஓட்டு தேவையில்லை. பிரச்சாரத்தில் திருமாவளவன் தந்த, பரப்பரப்பு பேச்சு

Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக உருவாக்கப்பட்டதாகும். அவர் அவ்வாறு பேசியிருக்கவில்லை.

இந்து நாய்களின் ஓட்டுகள் எங்களுக்குத் தேவையில்லை என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“6 தொகுதியிலும் டெபாசிட் இழந்தாலும் எங்களுக்கு இந்து நாய்களின் ஓட்டு தேவையில்லை. பிரச்சாரத்தில் திருமாவளவன் தந்த, பரப்பரப்பு பேச்சு” என்று இந்த வீடியோ வைரலாகிறது.

இந்து நாய்களின் ஓட்டுகள்
Screenshot from X @VCankam

Archived Link

Screenshot from x @summa_2024

Archived Link

Screenshot from Facebook/OlivuMaraivu

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: குஜராத்தில் ராகுல் காந்தியின் தெருமுனை பிரச்சாரம் என்று பரவும் கேரளா வீடியோ!

Fact Check/Verification

இந்து நாய்களின் ஓட்டுகள் எங்களுக்குத் தேவையில்லை என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் நியூஸ்கார்ட் கடந்த சில ஆண்டுகளாகவே சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்ற நிலையில் தந்தி டிவியின் பழைய நியூஸ்கார்ட் பாணியிலேயே இந்த வைரல் புகைப்படம் பரவுகிறது.

கடந்த ஏப்ரல் 04, 2021 அன்று இந்த நியூஸ்கார்ட் போலியானது என்று தந்தி டிவி தரப்பில் விளக்கமளித்துள்ளனர். மேலும், தற்போது தந்தி டிவி இந்த நியூஸ்கார்ட் வடிவமைப்பை நடைமுறையில் வைத்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: மதுவந்தி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றாரா அண்ணாமலை?

Conclusion

இந்து நாய்களின் ஓட்டுகள் எங்களுக்குத் தேவையில்லை என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Facebook Post from Thanthi Tv, Dated April 04, 2021

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular