திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024
திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

HomeFact Checkவிஜயை எதிர்க்க சீமான் ஆதரவு கேட்டார் என்று அறிக்கை வெளியிட்டாரா ரஜினி?

விஜயை எதிர்க்க சீமான் ஆதரவு கேட்டார் என்று அறிக்கை வெளியிட்டாரா ரஜினி?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: விஜயை எதிர்க்க சீமான் ஆதரவு கேட்டார் என்று அறிக்கை வெளியிட்டார் ரஜினி.

Fact: வைரலாகும் அறிக்கை போலியானதாகும். 2021 ஆம் ஆண்டில் ரஜினி மக்கள் இயக்கத்தை கலைப்பதாக ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கையை எடிட் செய்தே இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தும் நாதக தலைவர் சீமானும் சமீபத்தில் சந்தித்துக்கொண்டனர். இந்த சந்திப்பு சமூக வலைத்தளங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது ரஜினி தரப்பிலிருந்து இச்சந்திப்பு குறித்து அறிக்கை வெளியிட்டதாக ‘நவம்பர் 22, 2024’ தேதியிட்ட அறிக்கை ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது,

“தம்பி சீமான் என்னை வந்து சந்தித்தது உண்மை, ஆமை புகுந்த வீடும் சீமான் புகுந்த வீடும் விளங்காது என்பதால் இந்த உண்மையை ரசிகர்களாகிய உங்களுக்கு சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

நான் இறந்த பிறகு ரஜினிதான் என்னைய கூப்ட்டு பேசுனாருனு சொன்னான்னா நம்பாதிங்க அவந்தான் ரெண்டு மூனு கால் பன்னி பாக்கனும்னு சொன்னான் காரணம் கேட்டதுக்கு விஜயால் தூக்கம் கெட்டு அலைவதாகவும் சொன்னான் அதனால்தான் இந்த சந்திப்புக்கு ஒத்துக்கொண்டேன்.

எங்கள் வீட்டில் அவன் குடிச்சது குளிர்பானம் மட்டும்தான் ஆமைக்கறியோ அவிச்ச முட்டையோ கறி இட்லியோ சாப்டவில்லை. சாப்டதாக பொய் சொல்லிடுவானோ என்ற பயத்தில் இதை சொல்கிறேன்.

நான் அதை சொன்னேன் இதை சொன்னேன்னு கதை விடுவான் அவன் செவுல்லேயே விடு ஏன்னா இங்க வந்து விஜயை எதிர்க்கனும் ஆதரவு கொடுங்கனுதான் கேட்க வந்தான்.

இதுதான் நடந்தது ரசிகர்களே ஏமாறாதிர்கள்”
விஜயை எதிர்க்க சீமான் ஆதரவு கேட்டார் என்று அறிக்கை வெளியிட்டார் ரஜினி.

இந்த அறிக்கையை பலரும் பகிர்ந்து வருகின்றார்கள்.

விஜயை எதிர்க்க சீமான் ஆதரவு கேட்டார் என்று அறிக்கை வெளியிட்டார் ரஜினி.

X Link | Archive Link

விஜயை எதிர்க்க சீமான் ஆதரவு கேட்டார் என்று அறிக்கை வெளியிட்டார் ரஜினி.

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பாஜகவின் இடைத்தேர்தல் தோல்வியைக் கொண்டாடும் தமிழிசை என்று பரவும் நியூஸ்கார்ட் உண்மையா?

Fact Check/Verification

விஜயை எதிர்க்க சீமான் ஆதரவு கேட்டார் என்று ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டதாக பரவும் அறிக்கையில் அவன்தான், செவுல்லேயே விடு “ போன்ற மரியதையற்ற வார்த்தைகள், ‘ஆமைக்கறி, அவிச்ச முட்டைபோன்ற கேலி வார்த்தைகள்இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.

மேலும் அந்த அறிக்கை முழுவதும் அடிப்படை இலக்கணமின்றி, பேச்சு வழக்கில் பேசுவது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி எழுதப்பட்டிருந்தது. பொதுவாக ரஜினிகாந்தின் அறிக்கைகள் இதுப்போன்று மரியாதையற்று எப்பொழுதும் எழுதப்பட்டிருந்ததில்லை.

ஆகவே இவ்வாறு ஒரு அறிக்கையை ரஜினிகாந்த் வெளியிட்டாரா என அவரது எக்ஸ் பக்கத்த்தில் ஆய்வு செய்தோம். அதில் சீமான் சந்திப்பு குறித்து அறிக்கையோ, பதிவோ எதுவும் வெளியிட்டிருக்கவில்லை.

கடைசியாக நவம்பர் 10, 2024 அன்று மறைந்த நடிகர் டெல்லி கணேஷுக்கு இரங்கல் பதிவு பதிவிடப்பட்டிருந்தது.

விஜயை எதிர்க்க சீமான் ஆதரவு கேட்டார் என்று அறிக்கை வெளியிட்டார் ரஜினி.

அக்டோபர், 04, 2024 அன்று மருத்துவமனையிலிருந்து வெளிவந்த பிறகு வாழ்த்து தெரிவித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இதுத்தவிர்த்து இதற்குப்பின் எந்த ஒரு அறிக்கையும் ரஜினிகாந்த் தரப்பிலிருந்து வெளிவரவில்லை.

இதன்படி பார்க்கையில் கடந்த வெள்ளிக்கிழமை (22/11/2024) அன்று ரஜினிகாந்த் வெளியிட்டதாக பரவும் அறிக்கை போலியானது என அறிய முடிந்தது.

இதனையடுத்து வைரலாகும் அறிக்கையை கூகுள் லென்ஸ் பயன்படுத்தி ரிவர்ஸ் சர்ச் செய்து பார்க்கையில் ஜூலை 12, 2021 அன்று ரஜினி மக்கள் இயக்கத்தை கலைப்பதாக ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கை ஒன்று நமக்கு கிடைத்தது.

அந்த அறிக்கையை வைரலாகும் அறிக்கையுடன் ஒப்பிட்டு பார்க்கையில் வைரலாகும் அறிக்கை இந்த அறிக்கையை எடிட் செய்தே உருவாக்கப்பட்டுள்ளது என உறுதியானது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான அறிக்கையையும், எடிட் செய்யப்பட்ட போலி அறிக்கையையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Also Read: இளநீர் விற்கும் தாய்க்கு சல்யூட் அடித்த ராணுவ வீரர்; வைரலாகும் வீடியோ உண்மையானதா?  

Conclusion

விஜயை எதிர்க்க சீமான் ஆதரவு கேட்டார் என்று ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டதாக பரவும் அறிக்கை போலியானதாகும். 2021 ஆம் ஆண்டில் ரஜினி மக்கள் இயக்கத்தை கலைப்பதாக ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கையை எடிட் செய்தே இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
X post from Rajiniknth, Dated July 12, 2021
Self Analysis


உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular