சனிக்கிழமை, ஜூன் 22, 2024
சனிக்கிழமை, ஜூன் 22, 2024

HomeFact Checkசபரிமலை அரவண பிரசாதம் தயாரிக்கும் இடத்தில் சிறுத்தை என்று பரவும் தவறான வீடியோ தகவல்!

சபரிமலை அரவண பிரசாதம் தயாரிக்கும் இடத்தில் சிறுத்தை என்று பரவும் தவறான வீடியோ தகவல்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

சபரிமலை அரவண பாயசப்பிரசாதம் தயாரிக்கும் இடத்தில் உள் நுழைந்த சிறுத்தை என்பதாக வீடியோ தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில், சிறுத்தை ஒன்று பெரிய கொள்கலன்கள் இருக்கும் இடம் ஒன்றிற்குள் நுழையும் காட்சி இடம்பெற்றுள்ளது. பிரபல ஜோதிடர் ஷெல்வியின் பெயர் கொண்ட பேஸ்புக் பக்கத்திலும் இந்த வீடியோ ஷேர் செய்யப்பட்டுள்ளது.

Screenshot from Facebook/G Ramaswamy Srinivasan
Screenshot from Facebook/Sehlvi Daamu

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also read: பாரத் ஜோடோ யாத்திரையின் நடுவில் சிக்கனுடன் மது அருந்தினாரா ராகுல் காந்தி? உண்மை என்ன?

Fact Check/Verification

சபரிமலை அரவண பிரசாதம் தயாரிக்கும் இடத்தில் சிறுத்தை என்பதாகப் பரவுகின்ற வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

குறிப்பிட்ட வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து கூகுள் ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது, கடந்த டிசம்பர் 17, 2022 அன்று “Zoo officials capture leopard that strayed into Hetero pharma facility in Telangana” என்று The newsminute வெளியிட்டிருந்த செய்தி ஒன்றில் அதே சிறுத்தை உள்நுழையும் புகைப்படம் வெளியாகியிருந்தது.

இதுகுறித்த செய்தி வீடியோக்களிலும் வைரலாகும் சிறுத்தை வீடியோ இடம்பெற்றுள்ளது என்பதைக் கண்டறிய முடிந்தது.

எனவே, கேரள சபரிமலையில் அரவண பாயசம் தயாரிக்கும் இடத்திற்குள் நுழைந்த சிறுத்தை என்று பரவும் வீடியோ தகவல் தவறாக பரப்பப்பட்டு வருகிறது என்பதையும், குறிப்பிட்ட நிகழ்வு தெலுங்கானாவில் Hetero Pharma என்னும் மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்குள் நடைபெற்றது என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது.

Also Read: மக்காவில் பனிப்பொழிவு என்று பரவும் பொய்யான வீடியோ தகவல்!

Conclusion

சபரிமலை அரவண பிரசாதம் தயாரிக்கும் இடத்தில் சிறுத்தை என்பதாகப் பரவுகின்ற வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources

News Published by, The News Minute, Dated December 17, 2022
YouTube Video, From TV9 Telugu, Dated December 17, 2022
YouTube Video from, INN Channel, Dated December 17, 2022

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular