Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
Claim: சென்னை அடையார் பகுதியில் பழைய மகாபலிபுரம் சாலையில் தேங்கி நிற்கும் வாகனங்கள்
Fact: வைரலாகும் புகைப்படம் AI மூலமாக உருவாக்கப்பட்டதாகும்.
சென்னையில் மழை நேர நெரிசலால் தேங்கி நிற்கும் வாகனங்கள் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”சென்னை அடையார் பகுதியில் பழைய மகாபலிபுரம் சாலையில் தேங்கி நிற்கும் வாகனங்கள்.
திமுகவிற்கு ஓட்டு போட்ட சென்னை மக்களுக்கு வாழ்த்துக்கள்” என்று இந்த புகைப்படம் பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ராகுல் காந்தியை தேசத்துரோகி என்றாரா டிரம்ப்?
Fact Check/Verification
சென்னையில் மழை நேர நெரிசலால் தேங்கி நிற்கும் வாகனங்கள் என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தில் கார்கள் மற்றும் பேருந்துகள் ஒழுங்கற்ற முறையில் காணப்பட்டன. எனவே, அப்புகைப்படத்தை Hive Moderation டூல் மூலமாக ஆராய்ந்தபோது இப்புகைப்படம் 99.9 சதவீதம் AI மூலமாக உருவாக்கப்பட்டது என்று தெரிய வந்தது.
இதனை மேலும் உறுதிபடுத்திக்கொள்ள Illuminarty என்கிற டூல் மூலமாகவும் ஆராய்ந்து பார்த்தபோது இந்த புகைப்படம் 90% AI மூலமாக உருவாக்கப்பட்டது என்பது நமக்கு உறுதியாகியது.
எனவே, AI மூலமாக உருவாக்கப்பட்ட இப்புகைப்படத்தையே சென்னையில் வாகன போக்குவரத்து நெரிசல் என்று போலியாக பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகியது.
Also Read: மின்கம்பத்தை நடுவில் வைத்து கால்வாய் கட்டப்பட்டதாக பரவும் படம் தமிழகத்தில் எடுக்கப்பட்டதா?
Conclusion
சென்னையில் மழை நேர நெரிசலால் தேங்கி நிற்கும் வாகனங்கள் என்று பரவும் புகைப்படம் AI மூலமாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Image
Our Sources
Hive Moderation
illuminarty
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.