சனிக்கிழமை, ஜூலை 27, 2024
சனிக்கிழமை, ஜூலை 27, 2024

HomeCoronavirusநடிகர் அமீர்கான் ரூ .15000/- ஏழைமக்களுக்கு கோதுமை மாவுக்குள் வைத்து விநியோகித்தாரா?

நடிகர் அமீர்கான் ரூ .15000/- ஏழைமக்களுக்கு கோதுமை மாவுக்குள் வைத்து விநியோகித்தாரா?

உரிமைகோரல்

அதிர்ச்சி கொடுத்த கஜினி இந்தி பட நாயகன்,நடிகர் அமீர்கான் 1 கிலோ கோதுமை மாவு கொடுப்பதாக அறிவித்திருந்தார். 1கிலோ மாவுதானே அதனால்  நிறைய ஏழைகள் தானே போய் வாங்குவார்கள். வீட்டில் வந்து உடைத்துப் பார்த்தால் ஒவ்வொரு பாக்கெட்டிலும் 15000 ரூபாய் (உண்மையான ஏழைகள் கையிலேயே போய் சேர்ந்தது).சினிமாவையே மிஞ்சும் கிளைமாக்ஸ்.

சரிபார்ப்பு

கொரோனா வைரஸ் பரவி இருக்கும் இந்த  நிலையில் மக்களுக்கு உதவ எண்ணற்ற தன்னார்வ இயக்கங்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் நன்கொடைகளை மக்களுக்குக் கொடுத்து வருகின்றனர் .இந்நிலையில் திரைப்பட நட்சத்திரம் அமீர்கான் நன்கொடை அளித்த முறை சமூக ஊடகங்களில் விவாதத்திற்குரிய விஷயமாக உள்ளது.

ஏப்ரல் 23-ம் தேதி இரவு ஒரு ட்ரக்கில் வந்தவர்கள் ஒரு கிலோ கோதுமை மாவு இலவசமாக வழங்குவதாக கூவினர்,வசதி இருப்பவர்கள் யாரும் துட்சமாக நினைத்து முன்வரவில்லை. ஆனால் ,ஏழை மக்கள் வரிசையில் நின்று வாங்கிச் சென்றுள்ளனர். அடுத்தநாள் அதை திறந்து பார்க்கையில் ஒவ்வொரு மாவு பாக்கெட்டிலும் ரூ.15,000 மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. இதைச் செய்தது நடிகர் அமீர்கான் எனும் தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது .

உண்மை சோதனை 

கொரோனா வைரசுக்கு எதிராகப்  போராடுவதற்குப் பிரதமரின் நிவாரண நிதி மற்றும் மகாராஷ்டிராவின் முதல்வர் நிவாரண நிதிக்கும் அமீர்கான் நிதியுதவி அளித்து உள்ளார் .இதையடுத்து, அடுத்து வரவுள்ள  தனது படமான லால் சிங் சதாவில் பணியாற்றிய தினக்கூலி தொழிலாளர்களுக்கு நிதி ஆதரவை  வழங்க உள்ளார் என “இந்தியா டுடே ” பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது .

குஜராத் மாநிலம் சூரத் அருகே ஒரு நபர் ட்ரக்கில் வந்து ஒரு பாக்கெட் கோதுமை மாவில் 15,000 ரூபாய் நன்கொடை அளித்ததாகப் பஞ்சாப் கேசரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, அந்த நபர் தனது அடையாளத்தைக் கூட வெளிப்படுத்தவில்லை. அவரது நேர்மையை மக்கள் பாராட்டுகிறார்கள்.

https://www.punjabkesari.in/national/news/15-15-thousand-rupees-came-out-in-packets-in-flour-1157444

இந்த சம்பவம் குறித்து நியூஸ்செக்கர் சூரத்தில் உள்ள போலீஸ்  கட்டுப்பாட்டு அறையின் காவல்துறை அதிகாரிகளிடம் பேசினார், ஆனால் அவர்களுக்கும் இந்த விஷயத்தில் எந்த தகவலும் இல்லை. சூரத் காவல் கண்காணிப்பாளரைத் தொடர்பு கொள்ள விரும்பினார், ஆனால் அங்கிருந்தும் எந்த பதிலும் கிடைக்கவில்லை.இருப்பினும், உறுதிப்படுத்தல் தொடர்பாகக் குஜராத்தி மொழியில் வெளியிடப்பட்ட சந்தேஷ் என்ற செய்தி அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தியுள்ளது.

https://sandesh.com/surat-man-gives-15000-rs-hidden-in-flour-to-laborers-in-lock-down/

முடிவுரை

எங்கள் விசாரணையில் அமீர் பணத்தை விநியோகிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.  இதைப்  பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் அமீர்கான் தெளிவாகக் கூறியுள்ளார். ஆனால் சூரத் அருகே அப்படியொரு சம்பவம் நிகழ்ந்ததாக அப்பகுதி காவல்துறை தெரிவிக்கிறது .எனினும் ஏழை மக்களுக்கு உதவியவர்கள் யார் எனத் தெரியவில்லை என்பதையும் அறிய முடிகிறது .எங்கள் விசாரணையில் வைரல் கூற்றுத் தவறானது என்று நிரூபிக்கப்பட்டது.

Tools Used

  • Google Search
  • YouTube
  • Twitter Search
  • Direct Contact
  • Snipping

Result: False /Fabricated 

(உங்களுக்கு எந்தவொரு தகவலின் உண்மைத்தன்மையைத் தெரியவேண்டுமானால் எங்களிடம் 9999499044 என்ற வாட்ஸாப் எண்ணில் புகார் அளிக்கலாம். எங்கள் இணையதளத்தில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Most Popular