Saturday, March 22, 2025

Coronavirus

கிராம்பு, கற்பூரம், ஓமம், நீலகிரி தைலம் ஆகியவை இணைந்து அவசர நேர ஆக்ஸிஜனுக்கு உதவுகின்றனவா?

banner_image

கிராம்பு, கற்பூரம், ஓமம் மற்றும் நீலகிரி தைல எண்ணெய் சொட்டுகள் அடங்கிய சிறு பைகள் மூலமாக ஆம்புலன்ஸ்களில் அவசர கால ஆக்ஸிஜனை உருவாக்க முடியும் என்று புகைப்படத்துடன் கூடிய செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

கிராம்பு
Source: Facebook

உலக நாடுகள் மட்டுமின்றி, இந்தியாவையும் கடுமையாக அச்சுறுத்தி வருகின்ற கொரோனா பரவல் தமிழகத்திலும் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிகக் கடினமாக உள்ளது.

நோயாளிகள் பலரும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, உயிர்க்காக்கும் மருந்துகளின் தட்டுப்பாடு என்று இந்தச் சூழ்நிலை பயத்தை உருவாக்கு வதாய் இருக்கிறது. இந்நிலையில், கோவிட்-19 தொற்றுப் பரவலை முன்வைத்து பரவும் செய்திகளுக்கும் சமூக வலைத்தளங்களில் பஞ்சமில்லை.

ஜனவரி, பிப்ரவரியில் சிறிது ஆசுவாசமடைந்திருந்த மக்கள் தற்போது மீண்டும் கபசுர குடிநீர், சத்தான உணவு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வீட்டு வழிமுறைகள் என்று பரபரப்பாகியுள்ளனர்.

அந்தவகையில், கிராம்பு, கற்பூரம், ஓமம் மற்றும் நீலகிரி தைல எண்ணெய் எனப்படும் யூகலிப்டஸ் ஆயில் அடங்கிய சிறு துணி மூட்டைகள் அவசர கால ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து சுவாசக்கோளாறைப் போக்கும் என்கிற பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

“அவசர நேர ஆக்ஸிஜனுக்கு இதைச் செய்யுங்கள். கற்பூரம், கிராம்பு, அசாவின் (ஓம் கர்னல்) ஆகியவற்றின் சிறிய நீலகிரி எண்ணெய் சொட்டுகளை வைத்து படத்தில் காட்டப்பட்டுள்ளபடி சிறிய பைகளை உருவாக்கி இரவும் பகலும் வாசனை. இது இன்னும் அவசரகாலமாக இருக்கும்போது, ​​பெரும்பாலான ஆம்புலன்ஸ்கள் இப்போது அவசர நிலையில் உள்ளன, தயவுசெய்து அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.’’ என்கிற வாசகங்களுடன் இந்த போஸ்ட் வைரலாகி வருகிறது. மேலும், சிலர், லடாக் மலையேற்றத்தின்போது இந்தப்பைகள் உபயோகிக்கப்படுகின்ற என்கிற பதிவையும் இணைத்துள்ளனர்.

Source: Facebook

Facebook Link

கிராம்பு
Source: Facebook

Facebook Link

கிராம்பு
Source: Facebook

Facebook Link

கிராம்பு
Source: Facebook

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய அப்புகைப்படம் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification:

கிராம்பு, கற்பூரம், ஓமம் மற்றும் நீலகிரி தைலம் அடங்கிய சிறு மூட்டைகள் மூலம் ஆக்ஸிஜனை கொடுக்க முடியும் என்று பரவும் தகவல் குறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

இதற்கான விளக்கம் அறிய, மருத்துவர்களைத் தொடர்பு கொண்டு பேசினோம். ஆயுர்வேத மருத்துவரான திருமதி கமீலா நிகுமத் (BAMS PGDCP M. Sc counseling and psychotherapy), “கற்பூரம், கிராம்பு, ஓமம் ஆகியவை உடல் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் என்பதற்கு அறிவியல் ரீதியான விளக்கங்களோ, நிரூபணமோ இல்லை. ஆனால், பெரும்பாலும் மூச்சு விடுவதில் சிரமம் உள்ளவர்களுக்கு மருந்துகளில் இவற்றை உபயோகிப்போம். மூச்சுத்திணறல், மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளவர்களுக்கு அதிலிருந்து தற்காலிக நிவாரணத்தை அளிக்க இவற்றை மருந்துகளில் உபயோக்கிறோம். இவை உணவாகவோ, மருந்தாகவோ உடல் நோயெதிர்ப்பு சக்தியை கூட்டினாலும், ஆக்ஸிஜனை உருவாக்கும்; அதிகரிக்கும் என்பதற்கெல்லாம் எவ்வித ஆதாரமும் இல்லை” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, அரசு மருத்துவரான திரு.சாய் லக்‌ஷ்மிகாந்த் பாரதி (MD, General Medicine), “கற்பூரம், லவங்கம், ஓமம் ஆகியவை உடல் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. சொல்லப்போனால், கொரோனாவில் பாதிப்படைந்திருக்கும் நபர் இதனை நுகரும்போது, அவருக்கு இதனால் மேலும் மூச்சு விடுவதில் சிரமம்தான் உண்டாகும். அது தவறான எதிர் விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.

அதேபோன்று, கற்பூரம் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் என்பதற்கெல்லாம் அறிவியல் ரீதியாக எவ்வித நிரூபணமும் இல்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டுத்தனிமையில் இருப்பவர்கள் சுத்தமான கொதிநீரில் ஆவி பிடிப்பது நல்லது. ஆனால், அதுவும் கொரோனாவிற்கு மருந்து என்பதெல்லாம் இல்லை” என்று விளக்கமளித்தார்.

இதற்கான விளக்கங்களை மேலும் சில ஆங்கில ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. அவற்றை இங்கே, இங்கே மற்றும் இங்கே படிக்கலாம்.

Conclusion:

கிராம்பு, கற்பூரம், ஓமம் மற்றும் நீலகிரி தைலம் அடங்கிய சிறு மூட்டைகள் மூலம் உடல் ஆக்ஸிஜனை அதிகரிக்க முடியும் என்று பரவும் தகவல் ஆதாரமற்றது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Ayurveda Doctor Mrs.Kameela

Doctor Sai Lakshmikanth Bharathi

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,500

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage