வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkதி.மு.க கட்சிப் பிரமுகர் செல்வகுமார் பெண் மருத்துவரைத் தாக்கினாரா? வைரல் வீடியோவின் உண்மை

தி.மு.க கட்சிப் பிரமுகர் செல்வகுமார் பெண் மருத்துவரைத் தாக்கினாரா? வைரல் வீடியோவின் உண்மை

உரிமை கோரல்

தமிழ்நாடு திமுக கட்சித் தலைவர் செல்வகுமார் பெண் மருத்துவரைத் தாக்கினார் ,அவருக்குத் தண்டனைக் கிடைக்கும் வரை இதைப் பகிருங்கள் .

சரிபார்ப்பு

கொரோனா வைரஸ் அதிகம் பரவி இருக்கும் இந்தத் தருணத்தில் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மீது பல தாக்குதல்கள்  உலகம் முழுவதும் நடந்து வருகிறது .சில பொய்யானச் செய்திகளும் மருத்துவர்கள் குறித்துப் பரவி வருகிறது. இந்நிலையில் திமுக கட்சித் தலைவர் செல்வகுமார் ஒரு  பெண் மருத்துவரைப் பலமாக தாக்கிய வீடியோ வைரலாக  வலைத்தளங்களில் பரவி வருகிறது.எங்களது நியூஸ்செக்கரின் வாட்ஸாப் எண்ணில் வந்த இந்த செய்தியின் உண்மைத் தன்மையை அரியத் தொடங்கினோம் .

உண்மைச் சோதனை

முதலில் இந்த வீடியோ மற்றும்  அதனைச் சுற்றியுள்ள பொருட்கள் எதுவும் மருத்துவமனையைச் சேர்ந்தவை இல்லை என்பது கண்டறியப்பட்டது . பின்பு திமுக, செல்வகுமார் என்று இணையத்தளத்தில்  தேடுகையில் புதியதலைமுறையில் இந்த வீடியோவை காணமுடிந்தது . இதில் உறுப்பினர் செல்வகுமார் சத்யா என்னும் பெண்ணைச்  சரமாரியாகத் தாக்கியுள்ளார் .சத்யா பெரம்பலூர் மாவட்டம் வெங்கடேசபுரத்தில் பெண்கள் அழகு நிலையம் (பியூட்டி பார்லர்) ஒன்றை நடத்தி வருகிறார்.

உறுப்பினர் செல்வகுமார் மற்றும் சத்யாவிற்கு அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடந்து இருக்கிறது,இந்நிலையில் சத்யா செல்வகுமார் மீது காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றையும் பதிவு செய்திருக்கிறார். மீண்டும் செப்டம்பர் மாதம் 2018-ம் ஆண்டு இருவருக்குமான  வாக்குவாதம் முற்றியதால் சத்யாவை செல்வகுமார் சரமாரியாகத் தாக்கியுள்ளார் .

இந்த வீடியோ அங்குள்ள சிசிடிவியிலும் பதிவாகியுள்ளது ,இந்தச் சம்பவம் முடிந்து இரண்டு மாதங்களுக்குப் பின்னரே சத்யா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவுச் செய்தார்.விசாரணையில் செல்வகுமார் மற்றும் சத்யாவிற்குப்  பணம் கொடுத்தல் வாங்கலில் தகராறு ஏற்பட்டதாகத் தெரியவந்தது .பின்பு திமுகச் சார்பில் தற்காலிகமாகப் பதவியிலிருந்து  செல்வகுமார் நீக்கப்பட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கட்சியிலிருந்து  நீக்கப்பட்ட செல்வகுமார்,பியூட்டிப் பார்லர் சம்பவம் குறித்து திமுகத் தலைவர் ஸ்டாலினிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்ததாகவும் அதனால்தான் அவரை மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது .

முடிவுரை

எங்களின் ஆராய்ச்சிக்குப் பின்னர் இந்த சம்பவம் 2018ம் செப்டம்பர் மாதம் நிகழ்ந்த செய்தி .செல்வகுமார் தாக்கியது பியூட்டிப் பார்லர் வைத்து நடத்திய சத்தியாவை, மருத்துவரை அல்ல என்பது தெரியவந்து உள்ளது .

கொரோனா வைரஸ் அதிகம் பரவி இருக்கும் நிலையில் இதுபோன்ற பழையச் செய்திகள் மீண்டும் பரப்பட்டு மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது .

Sources

  • Google Search
  • Twitter 
  • Facebook
  • News Channel 

Result: MISLEADING 

(உங்களுக்கு எந்தவொரு தகவலின் உண்மைத்தன்மையைத் தெரியவேண்டுமானால் எங்களிடம் 9999499044 என்ற வாட்ஸாப் எண்ணில் புகார் அளிக்கலாம். எங்கள் இணையதளத்தில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Most Popular