ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeCoronavirusகொரோனா வைரஸ் காரணமாக இத்தாலி நாட்டில் மக்கள் பணத்தினை வீதியில் விட்டு எரிந்தார்களா? வைரலாகும் புகைப்படம்

கொரோனா வைரஸ் காரணமாக இத்தாலி நாட்டில் மக்கள் பணத்தினை வீதியில் விட்டு எரிந்தார்களா? வைரலாகும் புகைப்படம்

உரிமைகோரல்

இத்தாலியில் மக்கள் மரணத்தை நேரில்  சந்தித்தபிறகு நாம் சம்பாதித்த பணம் நம்மைக் காப்பாற்றாது என்று தெருவில் பணத்தை வீசியெறிந்த காட்சி தெருவில் பணத்தை கிடைக்கும் பணத்தைக் எடுக்க கூட யாரும் இல்லை இது தான் வாழ்க்கை , வாழும் பொழுதே நான்கு பேருக்குப் பயன்படட்டும்.

சரிபார்ப்பு

நாவல் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்துக்வருவதால் பல்வேறு சமூக ஊடக தளங்களில் பொய்யான செய்திகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது .இந்நிலையில்தான், இத்தாலி நாட்டினை மையப்படுத்திப் பல வதந்திகள், தவறான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவுகின்றன.

இத்தாலியில், அவர்கள் தங்கள் பணத்தை வீதியில் வீசுகிறார்கள். உடல்நலம் ஆபத்தில் இருக்கும்போது பணம் போதாது என்பது முழு உலகிற்கும் ஒரு தெளிவான செய்தி”. இது போன்ற செய்திகளும் பரப்பி வருகின்றனர் 

பல வாசகர்கள் சரிபார்ப்புக்காக நியூஸ் செக்கரின் வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் எண்ணுக்குக் கோரிக்கையை அனுப்பினர். சமூக ஊடகங்களில் பல பயனர்கள் அந்தந்த கைப்பிடிகளில் வைரல்  செய்தியைப் பகிர்ந்ததை நாங்கள் கண்டறிந்தோம்

LEGION on Twitter

In Italy, people have thrown their wealth in the way and told the world that when this wealth cannot save their loved ones from death, then it is of no use. Rich people should spend this wealth on the poor, lest you should also have to throw this wealth like this.

உண்மை சோதனை:

கூகிளின் ரிவேர்ஸ் இமேஜில் இந்த புகைப்படத்தைத் தேடுகையில் ,இந்த வைரல் புகைப்படம் மார்ச் 22 ,2019 ஆண்டு முகப்புத்தகத்தில் ஒருவர் பகிர்ந்து உள்ளார் மேலும் இந்த புகைப்படம் வெனிசுலாவிலிருந்து வந்ததாகத்தெரிகிறது.இடுகையின் தலைப்பு, ”இது வெனிசுலாவில் ஒரு தெரு. எல்லா பணமும் அரசுடையதாக ஓர் இடத்தில் சேரவேண்டும் , இது பயனற்றது, பொதுவுடைமை கொள்கையை ஏற்றவர்களை வரவேற்கிறேன் “

 

LEGION on Twitter

In Italy, people have thrown their wealth in the way and told the world that when this wealth cannot save their loved ones from death, then it is of no use. Rich people should spend this wealth on the poor, lest you should also have to throw this wealth like this.

இதன் உண்மையைச் சரிபார்க்கும்போது , பல ட்வீட்கள் ஒரே வைரல் புகைப்படத்துடன் சுற்றுவதைக் கண்டோம் .மார்ச் 12, 2019 அன்று பதிவேற்றிய ட்வீட்டுகள், மெரிடாவில் உள்ள பைசென்டெனாரியோ வங்கிகளைக் கொள்ளையடித்து, வெனிசுலா பொலிவார்களைத்தெருவில் விட்டுவிட்டு, அது பயனற்றது என்பதைக் காட்டப் பணத்தை தீ வைத்ததாக அந்த டீவீட்டில் கூறப்பட்டது.

CNW on Twitter

The bicentenario bank in Merida was looted, people left the Venezuelan bolivars behind and left the money on the street and set fire to piles of Venezuelan bolivars to prove its worthless #Venezuela #SinLuz

Segovia Bastidas on Twitter

AHORA Vandalizaron el Banco Bicentenario de la Av. 3 en Ciudad de #Mérida y esparcieron en la calle billetes del cono monetario viejo. Ya el estado cumple 4 días #SinLuz. @ReporteYa

முக்கிய  கீ-வார்த்தைகளைத் தேடலின் உதவியுடன், கூகிள் தேடலை நாங்கள் மேற்கொண்டோம்,  அதில் மார்ச் 12, 2019 அன்று வெளியிடப்பட்ட உள்ளூர் வலைத்தளமான மதுராதாஸில் ஒரு கட்டுரையைக் கண்டோம். அதே வைரல்  படங்களை வைத்து வெளிவந்த கட்டுரை, பைசென்டெனாரியோ வங்கி நிறுவனத்தை முகமூடி அணிந்த ஆண்கள் கொள்ளையடித்ததாகத்தெரிவித்தது அவென்யூ 3, குளோரியாஸ் பேட்ரியாஸ், மெரிடா மாநிலத்தில் மற்றும் பழைய நாணயத்தின் பொலிவார்களைத் தெருக்களில் சிதறடித்தனர் .

¡TERRIBLE! Encapuchados saquearon banco Bicentenario en Mérida y esparcieron bolívares del viejo cono monetario por las calles (+Fotos)

Este lunes 11 de marzo, encapuchados saquearon la agencia del banco Bicentenario en la avenida 3, de Glorias Patrias, en el estado Mérida. El hecho fue confirmado por el diputado de la Asamblea Nacional Williams Dávila, así como por el corresponsal de El Nacional en el estado Mérida, Leonardo León.

வெனிசுலாவின் தெருக்களில் கிடந்த அந்த நாணயம் பழைய நாணயம், போலிவர் ஃபூர்டே என்பதைக் கண்டறிந்தோம், அதேசமயம் ஆகஸ்ட் 2018 இல், பழைய நாணயம் ஒரு புதிய வடிவ நாணயமாக மாற்றப்பட்டது – பொலிவார் சோபெரானோ.

Venezuela issues new currency, amid hyperinflation and social turmoil

Venezuela is starting to use a new currency Monday to help bolster its collapsing economy

சி.என்.என் அறிக்கையின்படி, வெனிசுலா அதன் நொறுங்கிய பொருளாதாரத்தை உயர்த்தும் முயற்சியில் ஒரு புதிய நாணயத்தை வெளியிட்டது. வெனிசுலா அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட புதிய நாணயம் 100,000 பழைய பொலிவாரெஸ் ஃபியூர்டெஸ் மதிப்புடையது.

 

முடிவுரை:

 சமூக ஊடகங்களில் சுற்றில் இருக்கும்  படங்கள் இத்தாலியிலிருந்து வந்தவை அல்ல என்பது எங்கள் உண்மைச் சரிபார்ப்பிலிருந்து தெளிவாகிறது. இந்த வைரல் படங்கள் வெனிசுலாவிலிருந்து நாடு பொருளாதாரச்  சரிவை எதிர்கொண்டபோது வந்தவை.

Sources

 

  • Google Search
  • Media Reports
  • Twitter Search
  • Google Reverse Image Search

Result: False


(உங்களுக்கு எந்தவொரு தகவலின் உண்மைத்தன்மையைத்தெரியவேண்டுமானால் எங்களிடம் 9999499044 என்ற வாட்ஸாப் எண்ணில் புகார் அளிக்கலாம். எங்கள் இணையதளத்தில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.)

Most Popular