திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact Checkபிரதமர் மோடி பெண்களுடன் கர்பா நடனம் ஆடியதாக பரவும் தவறான வீடியோ!

பிரதமர் மோடி பெண்களுடன் கர்பா நடனம் ஆடியதாக பரவும் தவறான வீடியோ!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: பிரதமர் மோடி பெண்களுடன் கர்பா நடனம் ஆடியதாக பரவும் வீடியோ

Fact: இத்தகவல் தவறானதாகும். அவ்வீடியோவில் நடனமாடியவர் பிரதமர் மோடி போலவே முகச் சாயலுடைய விகாஸ் மஹேந்தே என்பவர் ஆவார்.

பிரதமர் மோடி பெண்களுடன் கர்பா நடனம் ஆடியதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பிரதமர் மோடி பெண்களுடன் கர்பா நடனம் ஆடியதாக வைரலாகும் வீடியோத் தகவல்

Twitter Link | Archived Link

பிரதமர் மோடி பெண்களுடன் கர்பா நடனம் ஆடியதாக வைரலாகும் வீடியோத் தகவல்

Archived Link

பிரதமர் மோடி பெண்களுடன் கர்பா நடனம் ஆடியதாக வைரலாகும் வீடியோத் தகவல்

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: அண்ணாமலை ஒரு மனநோயாளி என்றாரா அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்?

Fact Check/Verification

பிரதமர் மோடி பெண்களுடன் கர்பா நடனம் ஆடியதாக வைரலாகும் இவ்வீடியோவானது தமிழ் தவிர்த்து வேறு சில மொழிகளிலும் பரவி வருவதை காண முடிந்தது. இந்த வீடியோ தொடர்பான ஆங்கில பதிவில் வைரலாகும் பதிவில் இருப்பவர் ‘பிரதமர் அல்ல, வேறு ஒரு நபர்’ என்று ஒருவர் பதிலளித்திருப்பதை காண முடிந்தது.

இந்த பதிலுடன் புகைப்படம் ஒன்றும் பகிரப்பட்டிருந்தது. அப்படத்தில் மோடியின் முகச்சாயலில் அவர் போலவே ஒருவர் உடையணிந்து இருப்பதையும், அவரை சூழ்ந்து பெண்கள் நிற்பதையும் காண முடிந்தது. அப்பெண்களின் தோற்றம் வைரலாகும் வீடியோவில் காணப்படும் பெண்களின் தோற்றத்துடன் ஒத்துப்போவதையும் காண முடிந்தது.

இதனையடுத்து அந்த நபர் குறித்து தேடியதில் அவர் பெயர் விகாஸ் மஹந்தே என அறிய முடிந்தது. அந்நபரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லண்டன் தீபாவளி மேளாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதாக வீடியோ ஒன்று பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

அவ்வீடியோவை கூர்மையாக கவனிக்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் அதே உடையை அவர் அணிந்திருப்பதையும், கர்பா நடன உடையில் இருக்கும் பெண்களுக்கு அவர் வணக்கம் செலுத்துவதையும் காண முடிந்தது.

இதனையடுத்து விகாஸின் மக்கள் தொடர்பு மேலாளரை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக் கொண்டு வைரலாகும் வீடியோ குறித்து விசாரித்தோம். அவர் வைரலாகும் வீடியோவில் இருப்பவர் விகாஸ் மஹந்தேதான் என்பதை உறுதி செய்தார்.  கூடவே இவ்விழாவில் எடுக்கப்பட்ட சில படங்களையும் நம்முடன் பகிர்ந்தார்.

கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படுபவர் பிரதமர் மோடி அல்ல. அவர் போலவே முகச் சாயலுடைய விகாஸ் மஹேந்தே என தெளிவாகின்றது.

Also Read: ஆமை வடிவ கேக்கை வெட்டி பிறந்தநாளை கொண்டாடினாரா சீமான்?

Conclusion

பிரதமர் மோடி பெண்களுடன் கர்பா நடனம் ஆடியதாக வைரலாகும் வீடியோத் தகவல் தவறானதாகும். அவ்வீடியோவில் நடனமாடியவர் பிரதமர் மோடி போலவே முகச் சாயலுடைய விகாஸ் மஹேந்தே என்பவர் ஆவார். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Response on X by @devg311988, dated November 8, 2023
Video post on Instagram by Vikas Mahante, dated November 8, 2023
Telephone conversation with Pratik Mahante, son & public relations manager of Vikas Mahante

இச்செய்தியானது ஏற்கனவே நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் பிரசுரமாகியுள்ளது.

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular