Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் இரண்டு ஆண்டுக்குள் இறந்து விடுவார்கள் என்று பிரெஞ்சு வைராலஜிஸ்ட் லூக் மாண்டாக்னியர் கூறியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று பரவி வருகின்றது.
இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாம் அலையை கட்டுக்குள் கொண்டு வர இந்திய அரசு பல முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றது.
கொரோனோ மூன்றாம் அலை ஏற்படாமலிருக்க அனைவரும் தடுப்பூசி போட்டக் கொள்ள வேண்டும் என்று மருத்துவ வல்லுனர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் இரண்டு ஆண்டுக்குள் இறந்து விடுவார்கள் என்று பிரெஞ்சு வைராலஜிஸ்ட் லூக் மாண்டாக்னியர் கூறியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று பரவி வருகின்றது.
Archive Link: https://archive.ph/HY0dO
Archive Link: https://archive.ph/Z0YtX
Archive Link: https://archive.ph/DvC6G
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் இரண்டு ஆண்டுக்குள் இறந்து விடுவார்கள் என்று பிரெஞ்சு வைராலஜிஸ்ட் லூக் மாண்டாக்னியர் கூறியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியதைத் தொடர்ந்து நியூஸ்செக்கரின் வாட்ஸ்ஆப் எண்ணான 9999499044 என்கிற எண்ணில் பல வாசகர்கள் இதே கேள்வியைக் கேட்டிருந்தனர்.
ஆகவே வைரலாகும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து ஆய்வு செய்தோம்
அமெரிக்க ஊடகமான RAIR-க்கு லூக் மாண்டாக்னியர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றை தந்திருந்தார். இந்த நேர்காணலில் பிரெஞ்சு மொழியில் இவர் பேசி இருந்தக் கருத்துகள் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டிருந்தது.
அந்த மொழிப்பெயர்ப்பில் இருந்தததாவது,
“இது மன்னிக்க முடியாத குற்றம். சரித்திர புத்தகங்களில் இது எப்போதும் நினைவு கொள்ளப்படும். ஏனெனில் இந்த தடுப்பூசிகள் சீன வைரஸ்களிலிருந்து புதுவகை வைரஸ்கள் உருவாக வழி செய்கின்றது.
இந்த தடுப்பூசிகள் வைரஸ்களுக்கு புதிய சக்திகளைத் தருகின்றது. புதிய வகை வைரஸ்கள் உருவாவதற்கு இந்த தடுப்பூசிகளே காரணம். உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளிலும் இதுதான் நடக்கின்றது.
உலகம் முழுவதும் உள்ள வைராலஜிஸ்ட்கள் இதை அறிந்தும் மௌனமாகவே உள்ளனர்.
இந்த மொழிப்பெயர்ப்பை அடிப்படையாக கொண்டே கொரோனா தடுப்பூசி குறித்த மேற்கண்ட செய்தி வைரலாகி வருகின்றது.
ஆனால் லூக் உண்மையாகவே இதைத்தான் கூறினாரா என்பது சந்தேகத்திற்குரிய கேள்வியாகும்.
நம் ஆய்வில் The wire Science, Luc Montagnier’s Views on COVID Vaccines Are Latest Of His Wrong, Vexing Ideas எனும் தலைப்பில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்ததை அறிய முடிந்தது.
இச்செய்தியை எழுதிய டாக்டர் ஷாஹீத் பிரெஞ்சு அறிஞர்களிடம் இந்த பேட்டி குறித்து பேசி சில விஷயங்களை தெளிவு செய்துள்ளார். அவை:
- தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் இரண்டு வருடங்களில் இறந்து விடுவார்கள் என்று லூக் கூறவே இல்லை.
- தடுப்பூசியின் பக்க விளைவுகள் காரணமாகவே புதிய வகை வைரஸ்கள் தோன்றுவதாக லூக் கூறுகின்றார்.
- இந்த புதிய வகை வைரஸ்கள் அதிகப்படியான பாதிப்பை தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு ஏற்படுத்துவதாக லூக் கூறுகின்றார்.
- இந்த தடுப்பூசிகள் மருத்துவ உலகின் மிகப்பெரிய தவறு என்று லூக் கூறுகின்றார்.
இதன் அடிப்படையில் பார்க்கும்போது கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் இரண்டு ஆண்டுக்குள் இறந்து விடுவார்கள் என்று லூக் மாண்டாக்னியர் கூறியதாக பரவும் தகவல் தவறான ஒன்று என்பது நிரூபணமாகின்றது
மேலும் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கான PIB Fact check கணக்கிலும் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் இரண்டு ஆண்டுக்குள் இறந்து விடுவார்கள் என வைரலாகும் தகவல் பொய்யான தகவல் என்று தெளிவுப்படுத்தியுள்ளனர்.
வைரலாகும் இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் ஆங்கிலத்திலும் விரிவாக ஆய்வு செய்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதை இங்கே படிக்கலாம்.
Conclusion
கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் இரண்டு ஆண்டுக்குள் இறந்து விடுவார்கள் என்று பிரெஞ்சு வைராலஜிஸ்ட் லூக் மாண்டாக்னியர் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
PIB Fact Check: https://twitter.com/PIBFactCheck/status/1397156705918537729
RAIR: https://rairfoundation.com/bombshell-nobel-prize-winner-reveals-covid-vaccine-is-creating-variants/
Science The Wire: https://science.thewire.in/the-sciences/luc-montagniers-views-on-covid-vaccines-are-latest-of-his-wrong-vexing-ideas/
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.