வெள்ளிக்கிழமை, ஜூன் 21, 2024
வெள்ளிக்கிழமை, ஜூன் 21, 2024

HomeFact Checkநாளைய முதல்வர் எனப் போட்டுக் கொண்டாரா அமைச்சர் விஜயபாஸ்கர்?

நாளைய முதல்வர் எனப் போட்டுக் கொண்டாரா அமைச்சர் விஜயபாஸ்கர்?

உரிமை கோரல்

அடுத்த முதல்வர் ரெடி!

இந்த விஷயம் மாண்புமிகு முதலமைச்சர் 

 அவர்களுக்குத் தெரியுமா?!

சரிபார்ப்பு

கொரோனா பாதிப்புகளைச் சரிசெய்ய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது .நிறையத் தன்னார்வலர்களும் கூட தங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்குச் செய்து வருகின்றனர்,அரசியல்வாதிகளும் தங்களின் தொகுதி சார்ந்த மக்களுக்கு அரசின் ஒத்துழைப்போடு உரிய நிவாரண உதவிகளை வழங்குகிறார்கள் .இந்நிலையில் ,அமைச்சர் விஜயபாஸ்கர் தனது பகுதியில் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறார் .நிவாரணப் பொருட்களில் நாளைய முதல்வர் எனக் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பலரால் பகிரப்பட்டு வருகிறது . நியூஸெக்கரில்  இதன் உண்மைத்தன்மையை அறியத் தொடங்கினோம்.

உண்மை சோதனை

நாளைய  முதல்வர் எனக் குறிப்பிட்டு நிவாரணப்  பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டதா என ஆராய்ந்தோம். அமைச்சர் விஜய பாஸ்கர் தனது பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார் ,நிவாரண பொருட்களைத் தான் வழங்குகிறேன் என குறிப்பிட அவரது புகைப்படம் அச்சிடப்பட்டுக் கொடுக்கப்படுகிறது .தனது தொகுதி  மக்களுக்குப் பொருட்கள் வழங்குவது பற்றி தனது  டிவிட்டர் பதிவில் அவர் பகிர்ந்து இருந்தார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் கொடுத்த நிவாரணப் பொருட்களில் யாரோ “நாளைய முதல்வர் ” என்ற வார்த்தையைப் போலியாக மாற்றம்  செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர் .

அமைச்சர்  மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கியது மட்டுமே உண்மை .அதில் நாளைய முதல்வர் என்று எங்கும் குறிப்பிடவில்லை.

Sources

  • Google Search
  • Twitter 

Result: FALSE

(உங்களுக்கு எந்தவொரு தகவலின் உண்மைத்தன்மையைத் தெரியவேண்டுமானால் எங்களிடம் 9999499044 என்ற வாட்ஸாப் எண்ணில் புகார் அளிக்கலாம். எங்கள் இணையதளத்தில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular