Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
ரஷ்ய நிலநடுக்கத்தால் கடல்நீர் ஊருக்குள் புகுந்ததாக பரவும் வீடியோ.
வைரலாகும் வீடியோவுக்கும் ரஷ்ய நிலநடுக்கத்திற்கும் தொடர்பில்லை. 2017 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவின் டர்பன் கடற்கரையில் சிறிய சுனாமி ஏற்பட்டது. அதுக்குறித்த வீடியோவே இவ்வாறு பரப்பப்படுகின்றது.
ரஷ்யாவின் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது கடல்நீர் ஊருக்குள் புகுந்ததாக கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவல் குறித்த உண்மையை அறிய நியூஸ்செக்கர் சார்பில் இதுக்குறித்து ஆராய முடிவு செய்தோம்.
Also Read: ரஷ்யா நிலநடுக்கத்தின் வீடியோவா இது?
ரஷ்ய நிலநடுக்கத்தால் கடல்நீர் ஊருக்குள் புகுந்ததாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாக பிரித்து அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி வைரலாகும் வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில் Sun newspapers எனும் யூடியூப் பக்கத்தில் தென்னாப்பிரிக்காவிலுள்ள டர்பன் கடற்கரையில் இச்சம்பவம் நடைப்பெற்றதாக கூறி வைரலாகும் இவ்வீடியோவை மார்ச் 12, 2017 அன்று பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
இதனையடுத்து தேடுகையில் The Citizen எனும் ஊடகத்தில் சிறிய சுனாமி ஏற்பட்டதாக கூறி வைரலாகும் வீடியோ குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

மடகாஸ்கரில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக டர்பன் கடற்கரையில் பெரிய அலை உருவாகியதாக இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடுகையில் The Telegraph, Mirror UK உள்ளிட்ட ஊடகங்களிலும் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோவுக்கும் ரஷ்ய நிலநடுக்கத்திற்கும் தொடர்பில்லை என உறுதியாகின்றது.
2023 ஆம் ஆண்டில் துருக்கியில் நடந்த நிலநடுக்கத்தின்போதும் இதே வீடியோ பரப்பப்பட்டது. அச்சமயத்திலேயே நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் இவ்வீடியோ தென்னாப்பிரிக்காவில் எடுக்கப்பட்டது என்று செய்தி வெளியிடப்பட்டது.
Also Read: அதிமுகவிலிருந்து கடம்பூர் ராஜூ நீக்கப்பட்டதாகப் பரவும் நியூஸ்கார்ட் உண்மையா?
ரஷ்ய நிலநடுக்கத்தால் கடல்நீர் ஊருக்குள் புகுந்ததாக பரப்பப்படும் வீடியோ தவறானதாகும். 2017 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவின் டர்பன் கடற்கரையில் சிறிய சுனாமி ஏற்பட்டது. அதுக்குறித்த வீடியோவே இவ்வாறு பரப்பப்படுகின்றது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube video by Sun Newspapers, dated March 12, 2017
Report by The Citizen, dated March 12, 2017
Report by The Telegraph, dated March 14, 2017
Report by Mirror UK, dated March 14, 2017