Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
ரஷ்யா நிலநடுக்கத்தின் வீடியோ.
வைரலாகும் வீடியோவுக்கும் ரஷ்யா நிலநடுக்கத்திற்கும் தொடர்பில்லை. மியான்மரில் கடந்த மார்ச் மாதத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் எடுக்கப்பட்ட வீடியோவே இவ்வாறு பரப்பப்படுகின்றது.
ரஷ்யாவின் கம்சத்கா தீபகற்ப பகுதியில் 8.8 ரிக்டர் அளவுக்கு மிகக் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், ரஷ்யா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக கடை ஒன்று இடிந்ததாகவும், அந்த இடிபாடில் பெண் ஒருவர் சிக்கியதாகவும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. இவ்வீடியோவை தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் துணைத்தலைவர் கரு.நாகராஜன் உட்பட பலரும் பகிர்ந்து வருகின்றனர்.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவல் குறித்த உண்மையை அறிய நியூஸ்செக்கர் சார்பில் இதுக்குறித்து ஆராய முடிவு செய்தோம்.
Also Read: நயினார் நாகேந்திரன் வீட்டு விருந்தில் அண்ணாமலை அவமானப்படுத்தப்பட்டாரா?
ரஷ்யா நிலநடுக்கத்தின் வீடியோ என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாக பிரித்து அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி வைரலாகும் வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில் Stuff ஊடகத்தில் “WATCH: CCTV captures moment quake hit shop in Myanmar, sending shelves flying” என்று தலைப்பிட்டு வைரலாகும் வீடியோ குறித்து மார்ச் 31, 2025 அன்று செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

இச்செய்தியில் மியான்மரில் மண்டலாய் நகரத்தில் 7.7 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அந்த நிலநடுக்கத்தின்போது கடை ஒன்றில் இருந்த பெண்மணி மீது பெட்டிகள் விழுந்ததால் அவர் பாதுகாப்புக்காக குனிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து தேடுகையில் The Daily News யூடியூப் பக்கத்திலும் இவ்வீடியோ குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அச்செய்தியில் இச்சம்பவம் மியான்மர் நிலநடுக்கத்தில் நடந்ததாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடுகையில் RT, Day.Az உள்ளிட்ட ஊடகங்களிலும் இச்சம்பவம் மியான்மரில் நடந்ததாக செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
Also Read: நடிகர் ரஜினிகாந்த் வழுக்கி விழுந்ததாகப் பரவும் வீடியோ தகவல் உண்மையா?
ரஷ்யா நிலநடுக்கத்தின் வீடியோ என்று சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வீடியோ தவறானதாகும். மியான்மரில் கடந்த மார்ச் மாதத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் எடுக்கப்பட்ட வீடியோவே இவ்வாறு பரப்பப்படுகின்றது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report by Stuff, dated March 31, 2025
Report by The Daily News, dated March 31, 2025
Report by RT, dated March 29, 2025
Report by Day.Az, dated March 30, 2025