Fact Check
அதிமுகவிலிருந்து கடம்பூர் ராஜூ நீக்கப்பட்டதாகப் பரவும் நியூஸ்கார்ட் உண்மையா?
Claim
முன்னாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு அதிமுகவில் இருந்து நீக்கம்
Fact
வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக உருவாக்கப்பட்டு பரவுகிறது.
அதிமுகவிலிருந்து கடம்பூர் ராஜூ நீக்கப்பட்டதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
” பாஜக அரசை கவிழ்த்து வரலாற்று பிழை செய்தார் ஜெயலலிதா என்று பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு அதிமுகவில் இருந்து நீக்கம்..அதிமுக அறிக்கை வெளியீடு” என்று இந்த நியூஸ்கார்ட் பரவுகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவல் குறித்த உண்மையை அறிய நியூஸ்செக்கர் சார்பில் இதுக்குறித்து ஆராய முடிவு செய்தோம்.
Also Read: நயினார் நாகேந்திரன் வீட்டு விருந்தில் அண்ணாமலை அவமானப்படுத்தப்பட்டாரா?
Fact Check/Verification
அதிமுகவிலிருந்து கடம்பூர் ராஜூ நீக்கப்பட்டதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்ட் புதியதலைமுறை வெளியிட்டதாகப் பரவும் நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தோம். ஆனால், அதுபோன்ற எந்த நியூஸ்கார்டும் அவர்கள் பக்கத்தில் இடம்பெற்றிருக்கவில்லை.
எனவே, இதுகுறித்து புதியதலைமுறை டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் இவானியைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக உருவாக்கப்பட்டுள்ளது” என்று விளக்கமளித்தார். இந்த நியூஸ்கார்ட் போலியானது என்று புதியதலைமுறை தரப்பிலும் குறியிட்டு நமக்கு அனுப்பி வைத்தார்.

மேலும், இதுகுறித்து அஇஅதிமுகவின் தேசிய செய்தித்தொடர்பாளர் கோவை சத்யனை தொடர்புக்கொண்டு இதுக்குறித்து கேட்டபோது, “பரவும் செய்தி போலியானது” என்று விளக்கமளித்தார்.
Also Read: நடிகர் ரஜினிகாந்த் வழுக்கி விழுந்ததாகப் பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Conclusion
அதிமுகவிலிருந்து கடம்பூர் ராஜூ நீக்கப்பட்டதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Phone Conversation with, Ivani, Puthiyathalaimurai, Dated July 31, 2025
Phone Conversation with, Kovai Sathyan, AIADMK, Dated July 31, 2025