செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024
செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

HomeFact CheckViralசாய்ந்த நிலையில் கட்டப்பட்ட கட்டிடம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

சாய்ந்த நிலையில் கட்டப்பட்ட கட்டிடம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

சாய்ந்த நிலையில் கட்டப்பட்ட கட்டிடம் என்பதாக கட்டிடம் ஒன்றின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Screenshot from Twitter @Aathiraj8586

“மனசாட்சி வேண்டாமாடா?இவனுக ஊரில் ப்ளான் அப்ரூவல் எல்லாம் கிடையாதா?” என்பதாக இப்புகைப்படம் பரவுகிறது.

Screenshot From Facebook/mohamed.sidik.7906
Screenshot From Facebook/Shankar

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: நடிகர் ரன்பீர் கபூர் ஆத்திரத்தில் ரசிகரின் செல்போனை தூக்கி எறிந்தாரா? உண்மை என்ன?

Fact Check/Verification

சாய்ந்த நிலையில் கட்டப்பட்ட கட்டிடம் என்பதாகப் பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

குறிப்பிட்ட புகைப்படத்தை உற்று நோக்கும்போதே அதில் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு சாய்க்கப்பட்டிருப்பது நன்கு தெரிந்தது. தொடர்ந்து, அந்த புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம்.

அதில், கடந்த 2018 ஆம் ஆண்டு Tuko.co.ke என்கிற செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த செய்தியில் “The Nairobi County has ordered for demolition of a seven-storey building poorly constructed along the Kayole-Spine Road at Bee Centre in Umoja Estate. This follows public outrage after a photo of the building emerged on social media platforms.” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து, Tuko வெளியிட்டிருந்த முழுமையான கட்டுரையில் “On Friday, November 9, the county had directed the owner of the building to bring it down but the developer did not comply.” என்று இந்த கட்டிடத்தின் மற்றொரு புகைப்படமும் வெளியிடப்பட்டிருந்தது.

மேலும், அன்றைய Mike Sonko ட்விட்டரில் இதுகுறித்து, “My admin cannot sit back & watch innocent Kenyans trapped in collapsed buildings because of corruption.This morning a multi-agency team led by City Hall officials arrested owner of a condemned 7-storey building in Kayole for building without approvals/ignoring a demolition notice” என்று பதிவிட்டுள்ளார்.

இதன்மூலமாக, நைரோபியில் பாதுகாப்பற்ற முறையில் கட்டப்பட்டதாக இடிக்க உத்தரவிடப்பட்ட கட்டிடத்தின் எடிட் செய்யப்பட்ட புகைப்படமே தற்போது பரவுகிறது என்பது தெளிவாகிறது.

Also read: பாம்பன் பாலத்தில் இருந்து ராமேஸ்வரத்தீவின் அழகுத் தோற்றம் என்று பரவும் தவறான புகைப்படத்தகவல்!

Conclusion

சாய்ந்த நிலையில் கட்டப்பட்ட கட்டிடம் என்பதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Image

Sources
Report From, Tuko, Dated November 22, 2018

Twitter Post From, Mike Sonko, Former Nairobi Governor, Dated November 23, 2018


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular