உணவகம் ஒன்றில் எடுக்கப்பட்ட துருக்கியின் சமீபத்திய நிலநடுக்கத்தின் காணொளி என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

துருக்கியில் 7.8 ரிக்டர் அளவில் பதிவான பயங்கர நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் என்பதால் இடிபாடுகளுக்குள் சிக்கி ஆயிரக்கணக்காணோர் உயிரிழுந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், துருக்கி நிலநடுக்க காணொளி என்பதாக பல்வேறு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. அதில், உணவகத்திற்குள் துருக்கி நிலநடுக்க காட்சி என்று வீடியோ ஒன்று பரவுகிறது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பிரதமர் குறித்த ஆவணப்படத்தை தயாரித்த பிபிசி தயாரிப்பாளரை ராகுல் காந்தி சந்தித்தாரா?
Fact Check / Verification
உணவகம் ஒன்றில் பதிவான துருக்கி நிலநடுக்க காட்சி என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
முதலில், குறிப்பிட்ட வீடியோவை ஆராய்ந்தபோது வீடியோவின் வலது மேல் மூலையில் தேதி 30-10-2020 என்று குறிப்பிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.
எனவே, அந்த வீடியோ கடந்த 2020 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது உறுதியான நிலையில், வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த அக்டோபர் 31, 2020 ஆம் ஆண்டு HaberiniAl என்கிற துருக்கி செய்தி இணையதளம் இந்த வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.
மேலும், இதுகுறித்து துருக்கியில் கடந்த அக்டோபர் 30, 2020 ஆம் ஆண்டு 7.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது உணவகம் ஒன்றின் சிசிடிவி காட்சிகள் என்று Mehr News, Sismo Alerta News ஆகிய செய்தி இணையதளங்களும் பதிவிட்டுள்ளன.

இதுகுறித்த சமூக வலைத்தளப் பதிவுகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணுங்கள். எனவே, குறிப்பிட்ட வைரல் வீடியோ தற்போதைய நிலநடுக்கத்துடன் தொடர்புடையது இல்லை; கடந்த 2020 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.
Also Read: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் சிறுத்தைகள் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Conclusion
உணவகம் ஒன்றிற்குள் பதிவான துருக்கி நிலநடுக்க காட்சிகள் என்பதாகப் பரவுகின்ற வீடியோ கடந்த 2020 ஆம் ஆண்டு துருக்கி Izmir நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Missing Context
Sources
YouTube Video From, HaberiniAl, Dated October 31, 2020
YouTube Video From, Sismo Alerta News, Dated October 30, 2020
Video Report From, Mehr News, Dated October 31, 2020
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)