சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Checkகுடிநீர் ஊர்தி மூலமாக கழிவுநீர் அகற்றப்படுவதாக தவறாக பரவும் 2021ஆம் ஆண்டு புகைப்படம்!

குடிநீர் ஊர்தி மூலமாக கழிவுநீர் அகற்றப்படுவதாக தவறாக பரவும் 2021ஆம் ஆண்டு புகைப்படம்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: சென்னை மழையில் குடிநீர் வண்டில சாக்கடை தண்ணீர உறிஞ்சி ஏத்துறாங்க

Fact: இப்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய, 2021 ஆம் ஆண்டின் பழைய படமாகும். மேலும், நீர் அகற்றும் இயந்திர வாகனம் மூலமாகவே தேங்கியிருக்கும் நீர் அகற்றப்படுகிறது.

குடிநீர் ஊர்தி மூலமாக சாக்கடை கழிவுநீர் சென்னை மழையில் அகற்றப்படுவதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”குடிநீர் வண்டில சாக்கடை தண்ணீர உறிஞ்சி ஏத்துறாங்க.! ” என்று இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

குடிநீர் ஊர்தி
Screenshot from X @SuthanNayagam

X Link

Screenshot from Facebook/Dmohan Mohan

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: அசோக வனத்தில் சீதை அமர்ந்திருந்த கல் அயோத்திக்கு கொண்டு வரப்பட்டதாக பரவும் தவறான வீடியோ!

Fact Check/Verification

குடிநீர் ஊர்தி மூலமாக சாக்கடை கழிவுநீர் சென்னை மழையில் அகற்றப்படுவதாக பரவும் புகைப்படத்தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த நவம்பர் 29, 2021 அன்று, “நீரை உறிஞ்சும் இயந்திரம் மூலம் #ChepaukTriplicane தொகுதி சேப்பாக்கம் பகுதி சி.என்.கே சாலையில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகளை ஆய்வு செய்தோம். இப்பணியை விரைந்து முடிக்க குடிநீர் வழங்கல்&கழிவுநீர் அகற்று வாரிய பணியாளர்களை அறிவுறுத்தினோம். நன்றி. ” என்று தனது  X மற்றும் ஃபேஸ்புக் தளங்களில் பதிவிட்டிருந்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

எனவே, இப்புகைப்படம் கடந்த 2021ஆம் ஆண்டு மழையின்போது எடுக்கப்பட்டது; தற்போதையது அல்ல என்பது உறுதியாகிறது. மேலும், குடிநீர் வழங்கல் லாரிகள் பெரும்பாலும் ஓவல் வடிவமைப்புடனும், கழிவு நீர் அகற்று ஊர்திகள் வட்ட வடிவ பின்புறத்தோற்றத்துடனும் அமைந்திருப்பதும் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரிய அதிகாரி மூலமாக உறுதி செய்து கொண்டோம்.

Also Read: உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்கப்பட்ட காட்சி என்று பரவும் பழைய வீடியோ!

Conclusion

குடிநீர் ஊர்தி மூலமாக சாக்கடை கழிவுநீர் சென்னை மழையில் அகற்றப்படுவதாக பரவும் புகைப்படத்தகவல் தவறானது; கடந்த 2021ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
X Post from Udayanidhi Stalin, Dated November 29, 2021


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular